பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டில் இசைக் கவர்ச்சி 53 காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும் பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பர்." என்று கவிஞரே எடுத்துக் காட்டுவர். 'பொய்க் குயிலி' “பண்டுபோல் தனது பாழடைந்த பொய்ப் பாட்டை எண்டி சையும் இன்பக் களியேறப் பாடுவதைக் கேட்கின்றார்" பாட்டில் தன் உள்ளத்தைப் பறிகொடுக்கின்றார். பாட்டு முடியும்வரை பாரறியேன், விண்ணறியேன்; கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்! தன்னை யறியேன் தனைப்போல் எருதறியேன்: பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே கண்டேன்." என்று பறிகொடுத்த தன்னிலையை விளக்குகின்றார். இன்னி சையால் களிபேருவகையடைந்த நிலையில் படைப்பின் விளங்காப் புதிர்களையெல்லாம் எடுத்துக் காட்டி மகிழ்கின் றார் ஐம்பெரும் பூதங்கள் வட்ட உருளைகள்போல் வானத் தில் சுழலும் பெரிய உருக்கொண்ட பலகோடி அண்டங்கள், நாடோறும் பிறந்து அழியும் அனந்த கோடி உயிர்கள் போன்றவற்றின் படைப்புகளை எண்ணி வியக்கின்றார். இவை யெல்லாவற்றையும்விட் இசையே சிறந்தது என்பதை, ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவிலுமே கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா! காட்டுநெடு வானம், கடலெல்லாம் விந்தையெனில் பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா! பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில் நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ? 3. கு.பா. குயிலும் குரங்கும் - அடி (57-58) 4. டிெ: குயிலும் மாடும் - அடி (71-75)