பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் உள்ளுறை 63 இதற்கு இரண்டு காரணங்கள் இருப்பனவாக நமக்குத் தோன்றுகின்றது. கற்பனையில் உட்கருத்து உள்ளது என்து மட்டிலும் உணர்த்திருக்கலாம்; அல்லது உட்கருத்தை வெளி யிட கவிஞர் நாணப்பட்டிருக்கலாம். காதல் கவிதையில் கவிஞனே கதைத் தலைவன். தம்முடைய காதல் நாடகத்தை வெளிப்படையாகச் சொல்லுவதில் எவருக்குமே கூச்சம் இருப் பது இயல்பு. காதல் நாடகத்தில் உட்பொருள் வேறு உள்ளது என்றால் அஃது அதிகமான நாணத்திற்குத் தொடக்கமா கின்றது. இந்த இரண்டு காரணங்களில் எக்காரணத்தால் கவிஞர் தமது காவியத்தின் உள்ளுறைப் பொருளை விளக்க வில்லை என்பது ஒரு புதிராகவே உள்ளது. ஊகித்துக் கூறும் உள்ளுறை: (1) முதலில் காவியத்தின் நிகழ்ச்சிகளை நினைவுபடுத்திக் கொள்வோம். காலை நேரத்தில் மாஞ்சோலையில் குயில் பாடுகின்றது. கவிஞர் பாட்டைக் கேட்டு மயங்குகின்றார் . குயில்பாடுவது காதல் பாட்டு. பாட்டின் முடிவில் கவிஞர் குயிலினிடையே காதல் பேச்சு நடைபெறுகின்றது. நான்காம் நாள் சந்திப்பதாகச் சொல்லிக் குயில் சென்று விடுகின்றது: மறுநாள் அதே சோலை; அதே குயில். இப்போது குயில் குரங்குடன் காதல் நாடகம் நடத்துகின்றது. கவிஞர் உள்ளத் தில் சினம் பொங்குகின்றது. மூன்றாம் நாள் அதே சோலை; அதே குயில். அதே சோர நாடகத்தை இந்த முறை ஒருகிழ மாட்டுடன் நடத்துகின்றது குயில். நான்காம் நாள்க விஞர் - குயில் சந்திப்பு. கவிஞரின் சினம். குயில் சமாதானம் கூறிச் சப்பை கட்டுகின்றது. பிறகு கவிஞரிடம் அடைக்கலம் புகுகின் றது. குயிலின் உருமாற்றம். மாயையின் வீழ்ச்சி. இன்ட நுகர்ச்சி. இந்த நிகழ்ச்சிகளைத் தத்துவத்தில் பொருத்தி நோக்கு வோம். வேதாந்தத்தின் அடிப்படையில் குயில், மாடன்