பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 குயில்பாட்டு ஒரு மதிப்பீடு பாரதியைச் சோலையில் கவர்ந்தவை இன்னவை என்பதை இப் பாடற்பகுதியில் காணலாம். கவிதையைப் பெண்ணாக வும், காதலியாகவும், குயிலினை தீங்குரல் படைத்தவளாக வும் வருணிக்கின்றார் கவிஞர். கவிதைப் பெண்ணின் வாள் விழியொத்த மலர்கள் ஏதும் இல்லை. கவிதையின் தண்ணிய சொற்கள் போல் சுனை நீர் இல்லை. ஆனால் இசை அவர் தம் மனத்தைக் கவர்கின்றது. குயிலின் தீங்குரல் அவரை ஆட்கொண்டு விடுகின்றது. எனவே, இந்தக் கற்பனைக் குயில், குயில் பாட்டுக்கு இன்றியமையாத அடிப்படையாக அமைந்து நிற்கின்றது. அற்புதமான சாகாக் 'குயில்பாட்டு’ இந்த அடிப்படையில் எழுகின்றது. இந்தப் பாட்டில் பாரதி பாரின் உள்ளக் குரலினைக் கேட்கின்றோம்; உலகமே கேட் கின்றது. ஆன்மா உண்மையினையும் அழகினையும் நாடிச் செல்லும் துணிவினைப் பாட்டில் காண்கின்றேம்ே. கவிதை கவிதைக்காகவே கணிகின்ற போக்கு இங்குத் தென்படு கின்றது. பிரச்சாரமோ, நோக்கமோ, அறிவுரையோ இங்கு இல்லை. உண்மைக் கவிதைக்குரிய இலக்கணமாக உலகத் திறனாய்வாளர்கள் இந்த உயர் பண்பினையே விரித்தோது கின்றனர். "விண்டுரைக்க மாட்டாத விந்தைப் பெண்ணாக.அழகிய மங்கையாக-மாறி நின்ற குயிலின் எழிலை எற்றே தமிழில் இசைப்பேன்?’ என்று ஏங்கிக் கூறியவர் தமிழ்க் கவிஞர் பாரதியார். கற்றவர்க் கென்று அவர் கூறும் வார்த்தை இது; ...கவிதைக் கணிபிழிந்த சாற்றினிலே பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம் ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான்கலந்து காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் மாதவனின் மேனி வகுந்தான் பிரமனென்பேன்" 10. கு. பா. குயிலின் முற்பிறப்பு வரலாறு-அடி-241.45