பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கலாச்சாரத்தைக் காக்க
ஒரு குருகுலம்

திருச்சிராப்பளிள்ளியின் ஒரு பகுதி வரகனேரி.

வரகனேரியில் வேங்கேடச ஐயர் என்று ஒரு பெரியவர் இருந்தார். இவருடைய தொழில் வட்டித் தொழில். செட்டியார்கள் செய்ய வேண்டிய வட்டித் தொழிலை வேங்கடேச ஐயர் திறமையாகச் செய்து நல்ல பலன் கண்டார்.

சாஸ்த்திரப்படி பார்ப்பனர்கள் செய்யக் கூடாத தொழில்தான்! அதைப் பார்த்தால் முடியுமா?

வேங்கடேச ஐயருக்கு இந்து மதத்தில் தீவிர மான பற்று இருந்தது. திருச்சி வட்டாரத்தில் பாதிரிமார்கள் செய்த மத மாற்றங்களைக் கண்டு இவர் மனம் கொதித்தார். பல படித்த பார்ப்பனர்களே மதம்மாறியது பெரும் வருத்தமளித்தது. மத மாற்றம் செய்து கொண்ட ஆட்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாறும்படி அவர் வற்புறுத்தினார். அவர்கள் மீண்டு வர ஒப்புக் கொண்டாலும், திருச்சியில் இருந்த பார்ப்பன சாஸ்திரிகள் அவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொள்ளவிலலை. ஒருமுறை மதம்