பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

குருகுலப் போராட்டம்

பிற்காலத்தில் காங்கிரசில் பார்ப்பன ஆதிக்கம் மேலோங்கி யிருப்பதைக் கண்டும், காந்தியடிகள் அதிலிருந்து மீள முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தும், பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறிய காலத்தில், சண்முகனாரும் வெளியேறினார். பின்னால் சண்முகனார், பெரியாரின் தொண்டராகி தன்மான இயக்கத்தை நாடெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டார்.

பாரதியார், பாரதிதாசன் ஆகிய கவிஞர் பெரு மக்களுக்குச் சண்முகனார் பல முறை ஆதரித்து உதவியிருக்கிறார்.

அப்படிப்பட்ட சண்முகனாரின் கண்களில் ஐயரின் அறிவிப்பு வேண்டுகோள் தெரியவந்தது.

காந்தியவாதியான ஐயர், காந்தியடிகளின் நெறி முறையில் குருகுலம் நடத்துவார் என்று எண்ணிய சண்முகனார், சற்றும் காலம் தாழ்த்தாது குருகுலம் அமைக்க நிலம் வாங்குவதற்கு வேண்டிய தொகை மூவாயிரத்தையும் உடனடியாகக் கொடுத்து உதவினார்.

நிலம் வாங்கிய உடனே கட்டிடங்கள் கட்டுவதற்கும், பிற செலவுகளுக்கும் ஆயிரமும் நூறுமாகப் பல தமிழ்ப் பெருமக்கள் கொடுத்து உதவினார்கள்.

மளமள வென்று குருகுல வேலைகள் நடந்தன. கல்லிடைக் குறிச்சிப் பள்ளிக்கூடமும் குருகுலத்துடன்