பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

குருகுலப் போராட்டம்

தில் தமிழ் இலக்கியப் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வில்லையே என்று நான் வருத்தம் தெரிவித்த போது, கூடிய விரைவில் சிறப்புத் தமிழ்ப் பாடம் நடத்த ஏற்பாடு செய்வதாக ஐயர் உறுதி கூறியிருக்கிறார்.

மகாத்மா காந்தியவர்கள் குருகுலம் குறித்துப் பேசும் போது, “நடந்தது சரி, இனிமேல் சமபந்தியே நடத்துவதாக வாக்குக் கொடுங்கள். நான் நாயுடு விடமும் நாயக்கரிடமும் பேசி இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருகிறேன்.” என்று கூறினார்.

அண்ணல் காந்தியடிகளின் சொல்லையும் ஐயர் ஏற்றுக் கொள்ளவில்லை.

காந்தியடிகள் பேச்சுக்கு ஐயர் மதிப்புக் கொடுத்திருந்தால், பிரச்சினை இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காது என்றார் திரு.வி.க.

குருகுலத்திற்கு இடம் வாங்க முதன் முதலில் பணம் கொடுத்தவர் வயி.சு. சண்முகனார். அவர் செயற்குழு உறுப்பினரல்லர். இருந்தாலும் சிறப்பு அழைப்பின் பேரில் வந்திருந்தார்.

அவர் கூறினார்; ஐயர் பெரிய சிறந்த கல்வியாளர். முற்றும் கற்ற பெரியவர். அவர் சிறந்த தியாகி. தேசத்திற்காக உழைத்தவர். அவர் தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவார் என்று எதிர்பார்த்தேன்.