பக்கம்:குறட்செல்வம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அடுத்து, இன்பத்திற்காக மட்டுமே ம்ணவாழ்க்கை மல்ல. இலட்சியத்தை நோக்கி நடையோடும் வாழ்க்கை பில்-வழியிலே களைப்புத் தோன்றாமல் பயணம் செய்யவே உலகியல் இன்பங்கள். மனைவாழ்க்கையும் அத்தகையதே. சிலர் கருதுவது போன்று அது தீமையு மன்று-சிற்றின்பமுமன்று. எனினும், இலட்சியத்தை மறந்த நிலையில்-இங்கேயே தங்கிக் கிடக்கும்போது சான்றோரால் அது தவறு எனக் கண்டிக்கப்பெற்று

வத்திருக்கிறது.

வாழ்க்கையின் இலட்சியம் துன்பங்களினின்றும் விடுதலை பெறுதல். பிறப்பு இறப்புச் சுழற்சியினின்றும் நீங்கி திருவருட் சார்பு பெறுதல். இந் நோக்கத்தை நோக்கிப் பயணம் செய்யும்போதே, பிற உயிர்களுக்குத் தொண்டு செய்தலும் இணைக்கப் பெறுகிறது. மனையறத் தில் தலைவன், தலைவியாக இருந்து ஒருவருக்கொருவர் உதவி, இன்பம் பெற்று வாழ்தல் அம்ைப்பு.

இந்த அமைப்பிலேயே, இலட்சிய உணர்வோடு கூடிய வாழ்வியற் பயணம் செய்ய உதவும் மனித உடம்பைப் பெறாத உயிர்களுக்கு-துணை செய்யக் கூடிய மனித உடம்பைப் பெறாமல் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் உயிர்களுக்கு மனித உடம்பைத் தந்து உதவி செய்யக் கூடிய அரிய சாதனமாகவும் மனைவாழ்க்கை பயன்படு கிறது. ஆதலால், மனைவாழ்க்கையைச் சாதாரண ஒன்றாகக் கருதாமல் அதையே 'தவம் செய்யும் சாதன மாகக்கருதி, பயன்படுத்தினால் அறிவறிந்த மக்கட்பேறு கிடைக்கும்.

திருஞானசம்பந்தரை ஈன்றெடுத்த குடும்பம் மனைய மத்திலேயே தவம் செய்த குடும்பம் சிவநெறி வளர்க்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/32&oldid=1276243" இலிருந்து மீள்விக்கப்பட்டது