பக்கம்:குறட்செல்வம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்45

திருவள்ளுவர் நடுவு நிலைமை என்றே ஒரு அதிகாசம் வைத்தார். நடுவு நிலைமைக் கொள்கையை மேற். கொண்டொழுகுதலை "த்வம்' என்று கூடச் சொல்ல லாம். நடுவு நிலைமைக் கொள்கையை ஏற்றுக்கோடலில் வருகிற இடுக்கண்களைத் தொல்காப்பிய மெய்ப்பாட்டி யலிலே பேராசிரியர் விளக்குகின்றார். .

செஞ்சாங் திரியினும் ஏத்திலும் போத்தினும் நெஞ்சோர்க் தோடா நிலைமை.

என்று காட்டி "அது காமம் வெகுளி மயக்கம் நீங்கி னோர் கண்ணே நிகழ்வது' என்றும் பேசுகின்றார்.

நடுவு நிலைமைக் கொள்கையுடையோர் விருப்பு. வெறுப்புக்களினின்றும் விடுதலை பெறுதல் வேண்டும். இறைவனும் 'வேண்டுதல் வேண்டாமை இலான்' அன்றோ? அவ் இறைவனை வாழ்த்தி வணங்குகிறவர் களுக்கும், இக் குணவியல்பு இன்றியமையாததுதான்ே!

நடுவு நிலைமைக் குணம் இல்லர், நல்லவர்களாக இல்லாததோடு மட்டுமின்றித் தீயவர்களாகவும் இருப்பார் கள். அவர்கள் தீயவர்களாக இருப்பதோடு மட்டுமின்றி மற்றவர்களையும் கெடுத்து அறமில்லாத வழிகளில் செலுத்துவார்கள். . - .

அரசு அமைச்சின் வழி. அமைச்சு கெட அரசு கெடும். கெட்ட அரசு-கொடுங்கோல் அரசு, கதிரவன் சுடுகிக் காய்கின்ற காய்ச்சல் பயிர்களைச் சுடுதல்போன்று மக்களைச் சுடும். ஆதலால், அமைச்சர் நடுவு நிலைமை உட்ையோராயிருத்தல் வேண்டும், இக்கருத்தின்னயே பாலைக் கலி, - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/47&oldid=1276344" இலிருந்து மீள்விக்கப்பட்டது