பக்கம்:குறட்செல்வம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

  • @di தொரீஇ நயனில்லான் வினைவாங்கக் கொடிதார்ந்த மன்னவன் கோல்போல் ஞாயிறு கடுகுபு கதிர்மூட்டிக் காய்சினக் தெரிதலின்'

என்று பேசுகிறது.

நியாயம், நியாயமின்மை ஆகியவற்றிற்குக் கருவி, நடுவு நிலைமையுணர்வேயாகும். செல்வர்க்கும், வறியர்க் கும் ஒப்ப நியாயம் வழங்குவதே வாழ்வியல் முறை. இதனை, ... --

"முறை தெரிந்து செல்வர்க்கும் கல்கூர்ந்தவர்க்கும் இறை தெரியா நேரொக்கல் வேண்டும் -

என்று பழமொழி பேசுகிறது. ஆனால் உலகியலில் இன்று செய்தியை ஆராய்வதற்குப் பதிலாகச் செய்தி யாரால் சொல்லப்படுகிறது என்றே பார்க்கப்பெறுகிறது. மேலும் "செய்தியைச் சொல்லுகிறவர்கள் செய்தும் காட்ட வேண்டும்-அப்பொழுதுதான்் சொல்லலாம்' என்றும் சொல்லப்படுகிறது. - . . . . .

தீமையின் அனுபவத்தின் விளைவில்தான்் நன்மை ஆரும்புகிறது. ஆனாலும், அந்த நன்மைய்ைத் தோற்று விப்பதற்குக் காரணமாக இருந்த அந்தத் தீய அனுபவித் தில் எப்படி நன்மையைக் காண முடியும்? அதனால்

ஆராய்வு செய்தி பற்றியதாகவே இருத்தல் வேண்டும்.

நடுவு நிலைமைக் கொன்கை பண்படாத சமுதாயத் தில்-நட்புலகின் தொடக்கத்தில் இன்பம் இருக்காது. மாறாகத் துன்பம் தரும். நண்பர்களும் பகைவர்களாவர். எனினும், தொடர்ந்து நடுவு நிலைமைக் கொள்கையைக் கடைப்பிடித் தொழுகின் இறுதியில் இன்பம் வந்தெய்தும். ஆகவே தன்னுடைய வாழ்க்கை-தன்னலம் ஆகியவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/48&oldid=1276345" இலிருந்து மீள்விக்கப்பட்டது