பக்கம்:குறட்செல்வம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸71

நெஞ்சத்தின் இயல்பு எதுவோ, அதை விளைவுகள் காட்டும், சொற்களெல்லாம் நெஞ்சத்தின் இயல்பு முழுவதையும் காட்டுவதும் இல்லை. நமது தலைமுறைக் கவிஞர் கவியரசு கண்ணதாசன் அவர்கள், *

சொல்லில் வருவது பாதி-கெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி.

என்று குறிப்பிடுகிறார். அறநெஞ்சுடையார் குற்றமுடை யோரைக் கூட எளிதில் பகைக்க மாட்டார்கள். காரணம், குற்றத்தைத் திருத்த முடியும் என்று நம்புவார்கள். அதற் குரிய வழிவகைகளைக் கண்டு முயற்சிப்பார்கள். அறநெஞ் சுடையார்க்கு, குற்றத்தின் மீது வெறுப்பு இருக்குமே யன்றிக் குற்றமுடையார் மாட்டு வெறுப்பிருக்காது. அவனுடைய மனம் அறவழிப்பட்டதன்று. அவனுக்கு அறம் தெரியவே தெரியாது. அவன் மனம் தீது. கருதியது முடிக்க அறம் சொல்லிக்கொள்வது போலக் காட்டு கின்றான் என்று திருக்குறள் விளக்குகிறது. -

நீரில் நெருப்பிருக்காது என்பதுபோல, புறம் சொல்லும் புன்மையவரிடத்து அறம் இருக்காது.- இருக்க முடியாது என்பதை உணர்ந்து வாழவேண்டும். புறம்கூறும் பழக்கத்தினின்றும் நம்மை வில்க்கிக் கொள்ள வேண்டும். அதனைக் கேட்கும் பழக்கத்தையும் கைவிட வேண்டும்.

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான்் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். - -

இ.

டு со с

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/73&oldid=1276362" இலிருந்து மீள்விக்கப்பட்டது