பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I02 - - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா நல்ல மனமானது நல்ல உடலில் கிடைக்கும். நல்ல மனம் என்கிறோம். நல்ல உடல் என்கிறோம். அப்படியென்றால் நல்ல என்ற சொல் எதைக் குறிக்கிறது. மிக்க, நன்மையான கடுமையான என்னும் அர்த்தங்கள் காட்டுகின்ற சொல்லாக அது விளங்குகிறது. - கடுமை என்றாலும் வலிமை மிகுதி கண்டிப்பு என்றுதான் பொருள்தருகிறது. - - ஆகவே, நல்ல மனமான வலிமை மிகுந்த கண்டிப்பு. மிகுந்த மனம் எங்கே உண்டாகிறது வலிமையான உடலில்தான் என்பதுதான் உலகம் ஏற்றுக் கொண்ட உயர்ந்த உண்மை. அதைத்தான் கீர்த்தி பெற்ற கிரேக்கர்கள் தங்களது வாழ்க்கை வேதமாகக்கொண்டு வெற்றிகரமாக வாழ்ந்தார்கள். sound mind in a sound body Grgirl ugi gjati 56ir o ustri மூச்சான கொள்கையாக இருந்தது. அதைப் பின்பற்றித்தான் 2 asli arcosumbhealthymindina healthybody arsip Gumbidiri பின்பற்றியது. - - - அந்த Sound body என்ற சொல்தான். திண்ணியர் என்ற சொல்லுக்குரிய பொருளாகத் திகழ்கிறது. - எண்ணுவது எளிது. அதைப் பின்பற்றுவதுதான் கடினம். மருத்துவமனையிலே படுத்துக்கிடப்பவன் மனத்திலே ஆயிரம் ஆசைகள். ஆயிரம் திட்டங்கள். அரிய பெரிய தீர்மானங்கள் இருந்து என்ன பயன்? - அவன் நடமாடினால் தானே நான்கும் நடக்கும். மனத்திட்பம் என்பது மன வலிமையை மன உறுதியைக் குறிக்கிறது. - ... " வினைத்திட்பம் என்பது மனவலிமையை மன உறுதியை உருவாக்கித் தருகிற உடல் வலிமையை உடல் உறுதியைக் குறிக்கிறது. = + . . . * - இதைத்தான் திருமூலர் மிகத் தெளிவாகப் பாடியிருக்கிறார். - -