பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் 21 கண்ணுக்கு நேராக கட்டி வைத்ததை, காத்து வந்ததைக் காணவில்லையே? எங்கு மறைந்து போயிருக்கும்? - மண்குடத்திற்கு ஒரு மகிமை உண்டு. அதுதான் கசிகிற தன்மை. வாயில் வழியே தண்ணிர் வெளியே போக முடியாதவாறு இருந்தாலும், அந்தக் குடத்தைச் சுற்றியுள்ள பகுதியிலெல்லாம் கசிந்து கசிந்து, ஒசிந்து ஒசிந்து ஆவியாகி விட்டது. இதுதான் உண்மை. இந்த உண்மைக்கும் உடலின் தன்மைக்கும் நிறைந்த ஒற்றுமை உண்டு. உடம்புக்கு குட்ம் என்றும் கடம் என்றும் பெயர்கள் உண்டு. குடத்துக்குள்ளே தண்ணிர் இருப்பதுபோல, உடலுக்குள்ளே உயிர்க்காற்று நிறைய இருக்கிறது. நிறைந்து இருக்கிறது. . - - குடத் தைச் சுற்றி தண்ணிர்க் கசிவு கொள்ள, மண்பானையில் நுண்ணிய கண்கூறுகள் உண்டு. அதுபோலவே ஒன்பது வாசல்கள் உடலில் உண்டு. தேகத்திலும் தோலில் கண்கூறுகள் எண்ணற்ற எண்ணிக்கையில் உண்டு. - உடலிலே உயிர்க்காற்றானது, உயிர்ப்புச் சக்தியைத் தந்து - கொண்டே இருக்கிறது. இந்த உயிர்ப்பிலே ஏற்படுகின்ற அயிர்ப்பானது (மாறுபடுதல்) உடலின் சக்தியை வளர்ப்பதும் குறைப்பதும், இழப்பதும், உழப்பதுமாக மாறிக் கொண்டே வருகிறது. - * = . உடல் மாறிக் கொண்டுவரும் தன்மையைத்தான், இளமை என்றும் முதுமை என்றும் குறித்துக் காட்டுவார்கள். பலத்தின் . நலத்தின் மேன்மையைப் பற்றி பிரித்துக் காட்டுவார்கள். பசுமையாக, வலிமையாக இருக்கும் நிலையை இளமை என்றும், முற்றி முதிர்ந்து போய், ஒட்டித் தளரும் நிலையை முதுமை என்றும் எல்லோருமே விளக்கிக்கூறுவது யாவர்க்கும் தெரியும். | - - -