பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 - டாக்டர் எஸ் . நவராஜ் செல்லையா இளமைக்கு எத்தனை வயது? யாருக்குத் தெரியும்? இன்னும் கண்டு பிடிக்கப்படாத உண்மை இது. இளமை எத்தனை வயதில் முடிகிறது? முதுமை எந்த வயதில் தொடங்குகிறது? இளமை முடியும் இடம் எங்கே? முதுமை வந்து பிடிக்கும் இடம் எங்கே? முதிர்ந்த இந்த கேள்விக்கு உதிர்ந்த பதில்கள் கேட்பவர்களுக்குரிய ஐயத்தை இன்னும் நீக்கி விடவில்லை. இந்த இளமை நிலையும் முதுமை நிலையும் வாழ்ந்து விட்ட ஆண்டுகளுக்காகவும் வயதுக் கணக்கு அதிகமாகி விட்டதற்காகவும் வருவதும் அல்ல. உடலில் உள்ள அடிப்படை ஆதாரமான செல்கள், வளர்ச்சி அட்ைந்து கொண்டே வருகிறபோது, வாலிபம் இருக்கிறது. - - உடலின் செல்கள், வளர்ச்சி பெற்று பிரிந்து விட இயலாமல் (Metabolism) மென்மேலும் தளர்ச்சி யடைகிறபோது தள்ளாமை வந்து விடுகிறது என்கிற உண்மை நழுக்குப் புரிகிறது. - - இது எங்கே எப்பொழுது இடம் பெறுகிறது? எப்படி இடம. பிடிக்கிறது என்கிற சூட்சமம் தான் இன்னும் மர்மநிலையாக மண்டிக் கிடந்து கொண்டிருக்கிறது. - இதற்குப் பதில் கூறுகிற வகையில்தான் வள்ளுவரும் இந்தப் பாடலைப் பாடிச் சென்றிருக்கிறார். உயிரை அறுக்கும் வாளாக, நாள் ஒன்று வந்து போகிறது என்பதுதான் வள்ளுவர் வழி என்பதில், மேலோட்டமான கருத்தைத்தான்நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. - இந்தக் குறளுக்குள் இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து செல்வோம். நெஞ்சத்தில் நமக்குப் புரிகிறது, புலன்படுகிறது என்னவென்று பார்ப்போம். . . . . .