பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா உயிருக்கு இரண்டு நிலை உண்டு. ஒன்று உயிர்ப்பு என்பது பகல் போல ஒளிபோல. அயிர்ப்பு என்பது இரவுபோல இருள்போல. - - உயிர்ப்பு எழுச்சியையும் அயிர்ப்பு தளர்ச்சியையும் கொடுப்பது. ஆக, நாள் என்பதும் உயிர் என்பதும் ஒன்றுபோல உள்ளது என்பதற்காகவே ஒன்று போல காட்டி என்றார். அதாவது உதாரணமாகக் காட்டி இரண்டின் ஒற்றுமையும் ஒப்பற்றவையே என்பதைக் காட்டியிருக்கிறார். - நாளும் உயிரும் கொண்டிருக்கும் நுண்மையை, பசுமையை, இனிமையை, இழுக்கின்ற சக்தியாக வாள் இருக்கிறது. வாள் என்றால் கத்தி. அறுக்கும் ஒர் ஆயுதம் என்ற அர்த்தத்திலிருந்து, நாம் இங்கே சற்று மாறுபடுகிறோம். நாளின் தன்மையையும் உயிரின் தன்மையையும் இணைத்துக் காட்டி அவற்றின் பெருமையை விளக்கும் ஒளியாக நமது உடலின் உண்மை நிலை இருக்கிறது. அந்த உண்மை நிலை என்ன? உணர்தல் எப்படி? \ - உணர்தல் என்பதற்கு துயிலெழுதல்; அயர்வு நீங்குதல் என்று அர்த்தம். - - o உடல் உறங்குகிறபோது உயிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது. விழித்ததும், உயிர்ப்புசக்தி கூடிவிடுகிறது. இருளும் பகலுமாக விளங்குகிறது உலகம். உயிர்ப்பும் அயிர்ப்புமாக விளங்குகிறது உயிர். இந்த உலகம் என்னும் இடத்தில் உயிர் நிறையாக உலா வர், உடல் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ... " உயிர்ப்புச்சக்தியை வளர்த்துக் கொண்டு உடலின்சக்தியை நிறைத்துக்கொண்டு, உலக வாழ்க்கையின் உண்மை நிலையை உணர்ந்து கொண்டு, ஒப்பற்ற வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்பதைத் தெளிந்து அறிந்து கொள்ள வேண்டும்.