பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அதுதான் இயற்கையைக் கற்ற முறையின் முடிவாகும். இயற்கையை எந்த அளவுக்குக் கற்றிருக்கிறோமோ, - அந்த அளவுக்குத்தான் நடந்து கொள்ள முடியும். - அரைகுறை அறிவுடன் இயற்கை வழி செல்லுதல் தவறுக்குள்ளாக்கிவிடும். எச்சரிக்கை வேண்டுமல்லவா! அதனால்தான், வள்ளுவர் மிகச் சூட்சமமாக எச்சரிக்கிறார். அதற்குத்தக என்று அறிவிக்கிறார். இயற்கையைப் பற்றி, கற்றிருக்கும் அளவுக்கு நீங்கள் நடந்து கொள்கிற போது நேர்கிற பயன்களும், நிலவுகிற சூழ்நிலைகளும் நெஞ்சுக்கு இன்பமாக இருக்கும். இதமாக இருக்கும். - தெரிந்ததற்கு மேலே, தெரியாததையும் சேர்த்துக் கொண்டு தெளிவற்ற முறையில் செய்கிற காரியம் உடலுக்குத் துன்பம். வாழ்வுக்கும் துன்பம்; காலமெல்லாம் துன்பம். ஆகவேதான், கற்கும் போதே நாம் தெளிவாக கற்றுக் கொள்ள வேண்டும் மண்ணின் அளவே மரம் வளரும். நீரின் அளவே மலர் உயரும். பண்பின் அளவே பழக்க வழக்கம் - சிறக்கும். - - அதுபோலவே, கற்றதின் அளவே கடமைகள் சிறக்கும் வாழ்வும் செழிக்கும். - இயற்கையைப் படியுங்கள். இயற்கையுடன் வாழுங்கள். இயற்கையாய் இருங்கள். பிறரிடம் உதவி எதையும் எதிர்பாராத கைம்மாறு கருதாத இயற்கைபோல் வாழுங்கள். நாமும் கற்போம்; கற்றபடி நடப்போம்.