பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தானும், அவரைப் போன்று, எங்கும் அலைந்து கெடுவானாக' என்றுபரிமேலழகரின் உரை படைத்தவன் மீது பாய்ந்து ஒலிக்கின்றது. - - * உலகத்தினை உண்டாக்கியவன், வாழ்வார்க்கு முயற்சி செய்து வாழ்வதல்லாமல் யாசித்தும் உயிர் வாழ்தலை விரும்பி விதித்தானாயின், அக் கொடியோன்தானும் அவனைப் போன்று எங்கும் திரிந்து கெடக்கடுவன் என்று, தீர்க்கமாகக் கூறிப்பொருளுரைக்கிறார் திருக்குறள் முனுசாமி. - உலகில் ஒருவன் இரந்து தான் உயிர் வாழ வேண்டும் என்றால், குடி மக்களுக்கான பொருளைத் திரட்டிக் தரும் பொருளை ஏற்றுக் கொண்டிருக்கும் நாடாள்பவன் அப்படிக் கடமையைச் செய்யாமையின் காரணமாக, இர்ப்பவரைப் போலவே அலைந்து திரிந்து கெடுவானாக என்கிறார் நாவலர் நெடுஞ்செழியன். இரந்து பெற்றுத்தான் ஒருவன் வாழ வேண்டுமென்னும் நிலைமை உண்டாயின், அவ்வாறு வாழச் சட்டங்களை இயற்றிய ஆட்சியாளன் அலைந்து கெடுவானாக என்று மதுரை இளங்குமரனார் சற்று மாறுப்பட்டுப் பொருள் கூறுகின்றார். இங்கே, இனி நாம் எப்படி இதற்குப் பொருள் காணப் போகிறோம் என்பதைத் தொடர்வோம். - - உலகியற்றியான் என்பதுதான்குறளின் வரி. * உலகு என்பதற்கு உயர்ந்தோர், ஒழுக்கம், உலகம் என்பது பொருள். - - சான்றோர் என்பதற்கும் உலகம் என்று பொருள். இயற்றுதல் என்றால் ஏவுதல், செய்தல், நடத்தல் என்று பொருள். - - - இயற்றி என்றால், முயற்சி என்றும், சக்தி என்றும் பொருள். - - அரசன்தான் அனைத்துக்குக் காரணம் என்பதாக மனத்தில் கொண்டு, அவனேஅலைந்துகெடுக என்று கூறினால், நாம் பாதிக் கிணறு தாண்டியது போல ஆகிவிடும். அரசனது தொழில் என்று ஆறு நிலையைக் கூறுவர். -