பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

তPগুষ্ঠতg புதிய பொருள் 73 உரவு என்றால், அறிவு, வலிமை, மனோபலம், மிகுதி என்று பல பொருள்கள். ஆக, ஒப்புரவு என்றால், அழகும் அறிவும் வலிமையும் மனோபலமும் மிகுதியும் பெறத் தனக்குள் சம்மதித்து உடன்பாடு கொண்டு வாழ்வது என்று பொருள் கொள்ளலாம் அல்லவா? - இப்படி ஒரு உறுதி நிலைக்கு வரவேண்டுமென்றால் எதுகுறித்து எதைப் பற்றி என்று முடிவு செய்ய வேண்டாமா? அதைத்தான் இந்தக் குறளில் வள்ளுவர் துல்லியமாகக் குறித்துக் காட்டுகிறார். - - ஒத்தது அறிவான் என்கிறார் வள்ளுவர். ஒத்தது என்பதற்கு, கல்வி கேள்வியில் தெளிந்தவற்றில் ம ைம் ஊன்றி நிற்பது என்று அர்த்தம். ஒத்ததை அறிவான் உயிர்வாழ்வான் என்கிறார் வள்ளுவர். அப்படி என்றால் ஒத்தது எது? - - - - உயிர் வாழ்வான் என்றால் சுவாசம் இழுத்து வெளியே விட்டுக் கொண்டு வாழ்பவன் என்று அர்த்தமல்ல. உலகிலே நடமாடுபவன் என்றும் அர்ததமல்ல. உயிர் என்றால் உயிர்ப்பு எனலாம். ஒவ்வொரு முறை உயிப்ப்பினை (Inspiration)க் கொள்கிறபோது, சோர்வு நீங்கிப் புதுப் பலம் அடைவதற்குப் பெயர்தான் உயிர்ப்பு. உயிர்ப்புடன் வாழ்வது என்பது உவப்புடன் வாழ்வது. உற்சாகத்துடன் வாழ்வது உயிர்ச் சக்தியின் மிகுதியால் மேன்மை பெற்று விளங்குவது. - - இப்படி உயிர்ப்பு அதிகம் பெற்று வாழ்வதற்கு உதவுவது உடல்தானே! - - இந்த உடலுக்கு, உடல் பலத்திற்கு, உடல் நலத்திற்கு, உடல்வளத்திற்கு ஒத்த்து எது என்று கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, அவற்றிற்குப் பதிலை அறிந்து கொண்டு உடலைக் காத்து வாழ்கிறவன்தான் உயிர்ப்புடன் வாழ்கிறான். -