பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அப்படி ஒரு உன்னதமான வாழ்க்கை நடத்துகிறவனே உலகத்தை இரசிப்பான். உலக மக்களை மதிப்பான். ஒழுக்கத்தைப் புகழ் வான், பிறருக்கும் உதவுவான். பெருமையான காரியங்களைப் புரிவான். - உடலுக்கு ஒத்தது எது என்றால், இயற்கைதான். இயற்கை வாழ்க்கைதான். - நம் உடலில் மூன்று முக்கிய மூலப் பொருள்கள் உண்டு. நீர், தீ, காற்று என்பவை. அவைகள் மிகுதியாகப் போனாலும் குறைவாகப் போனாலும் வியாதிகள் வந்து வீழ்த்தத்தொடங்கி விடும். = . . - இதைத்தான் பித்தம், வாதம், சிலேத்துமம் என்றார்கள். சூரியன், காற்று, தண்ணிர், நிலம், வானம் இவையெல்லாம் தனது உடலுக்கு எப்படி உதவும், எப்படி எப்படி உயிர்ப்பு தரும் 2 துளைத்து விடும் என்று அறிந்து கொண்டு அதற்கு ஒத்தது போல் வாழ்கிறவன்தான் உயிர் வாழ்கிறான். உன்னதமாக உலா வருகிறான். - இப்படி இயற்கைக்கு மாறாக, உடலைச் சிதைக்கின்ற காரியங்களைச் செய்பவர்கள், நோயால் நொறுக்கப்படு கிறார்கள். - இயற்கைக்குப் புறம்பாக ஒத்துப் போகாது. வாழ்கிறபோது, வெப்பம் மிகுதியாகிறது. காய்ச்சல், வெப்பம் குறைகிறபோது ஜன்னி. காற்று குறைகிறபோது தளர்ச்சி. காற்று தடை படுகிறபோது ஆஸ்த்மா. அதிகக் காற்று வாதம். இப்படி ஒத்துக் கொள்ளப்படாத ஒழுக்க வழக்கங்கள் யாவும் உடல் சத்தியினைக் குறைத்து விடுகின்றன. உடல் சத்துக் குறைகிறபோது தான் செத்துப் போகிற உடல் நிலை மனோநிலை உண்டாகின்றது. - நோய்ப்பட்டு படுக்கையில் படுத்துவிட்டால், அவர்கள் செத்தவர்கள் போல்தானே கிடத்தப்படுகிறார்கள். - - அதனால்தான் அவர்களைச் செத்தாருள் வைக்கப்படும் என்றார். செக்த வர்ாள் உயிர்ப்பும் நன்.ெ :ெற மு-ைன்ொர்.

  • ---------sow-----