பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள்- - 79 இன்னொரு அர்த்தமும் இதில் அடங்கியிருக்கிறதே அமர்+அருள்-அமரருள் . ", அமர் என்றால் பகைவர் என்று அர்த்தம். பகைவரின் கருணைகூட அடக்கமுள்ளவர்க்குக் கிடைக்கும். அடக்கம் உள்ளவர்களுக்குப் பகைவர்களே கிடையாது. அப்படி இருந்தாலும் அவர்கள் வெறுப்புக் கொள்ளமாட்டார்கள். மாறாக அருள் பாலிப்பார்கள். அன்பு காட்டுவார்கள். - - - - அப்படிப்பட்ட பகைமை இல்லாத வாழ்வும் பெரியோர்கள் போற்றுகின்ற சூழலும் ஒருவர்க்கு இந்த உலகமே இன்ப வீடாக அல்லவா அமைந்து விடுகிறது. கண்ணுக்குத் தெரிகின்ற காட்சியாக விளங்குகின்ற இந்தப் பூமி தானே இன்ப உலகம். தெய்வ உலகம். தேமதுரம் வழங்குகின்ற தெய்வீக உலகம். - - அடங்காமை என்ற சொல்லுக் குக் கீழ்ப்படியாமை என்பது பொருள் மனம் வாக்குக் காயங்களில் அடங்காத தன்ம்ை;தீய நெறிகளில் திரிகின்ற தன்மை என்றும் அர்த்தம். அடுத்த சொல் ஆரிருள்: - : ஆரிருள் என்றால் நரகம் என்பது திறன் முடிந்த முடிபாக, இருக்கிறது. கற்பனையான துன்ப நிலத்தைக் கருத்துக்களில் நம்மவர்கள் அழமாக பதித்துக் கொண்டார்கள். அந்தக் கருத்தை அழிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. - வள்ளுவர் குறிப்பிடும் ஆரிருள் என்பதுஆர்+இருள் பிரிகிறது. - ஆர் என்றால் பூமி என்றும் நிரப்பு என்றும் மேன்மேலும் பல பொருட்கள் உண்டு. இருள் என்றால் இருட்டு, மயக்கம், உன்மத்தம், துன்பம், அஞ்ஞானம், அறியாமை, ஒளிமங்கி, கருமை என்றெல்லாம் . அர்த்தங்கள் உண்டு. ... -- - * *