பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையர், 16. எச்சமும் மிச்சமும் - நமது முன்னோர்கள் எதை எதையெல்லாம் கர்மம் என்று வெறுத்து ஒதுக்கினார்களோ, அதையெல்லாம் தர்மம் என்று ஆதரித்துப் பேசி ஆரவாரத்தோடு பின்பற்றுகிற இந்த அடாவடிக்காலத்தில், வள்ளுவர் கூறும் வார்த்தைகளை வாழ்க்கையாக்கிக் கொண்டால் என்ன ஆகும். இதற்குக் கற்பனையே தேவையில்லை. அந்த உண்மையைத் தான் இந்த ஊரும் உலகும் அறியுமே! சாக்கடையில் பன்றி சுகிக்கிறது? சுடுமணலில் கழுதை புரள்கிறது. குட்டையில் எருமை கும் மாளமிடுகிறது. கண்டதையும் தின்கிறது காக்கை என்றால் சிங்கமும் அப்படிச் செய்யுமா! செம்மாந்த சிந்தனையும் தூய்மையான வார்த்தைகளும், சுயநலமற்ற வாழ்க்கை முறைகளையும் பின்பற்றுபவர்கள், பின்பற்றி வாழப் பிரயத்தனப் படுபவர்கள் எல்லாம், கீழ்த்தனமானவர்களின் கீர்த்திமிக்க வாழ்க்கை முறையைக் கேவலமாகத்தானே நினைப்பார்கள் - - கிளுகிளுப்பூட்டும் அந்தச் செயல்களைச் செய்ய மனம் ஒப்பார்கள். நன்றாகச் சிந்தையை அடக்கும் மனிதர்களைத்தான் மக்கள் மதிப்ப்ார்கள். அவர்கள் செயல்களால்தான். அவர்கள் தரம் பிரிக்கப்படுகின்றார்கள். இதைத்தான் வள்ளுவர் உள்ளத்தைத் தைப்பது போலப் பாடியிருக்கிறார். - தக்கார் தகவிலர் என்பது அவரவர் - - எச்சத்தால் காணப் புடும் - (114). எல்லோருக்கும் எளிதில் அர்த்தம் புரியக்கூடிய குறள். ஆனால் அர்த்தமும் ஆமும் நிறைந்ததாகத் தானே இருக்கிறது என்பதை அர்த்மாக்கியிருக்கிற குறள் இது. உரையாசிரியர்களின் அர்த்தத்தை முதலில் படிப்போம். -