பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 O அ. ச. ஞானசம்பந்தன்


தெரியாத அனாதையாகவே அக்கொடைவள்ளல் இருக்க, நேரிட்டது. எவ்வளவு நல்லவர்களையும் இழித்துப் பேச அஞ்சாத இவ்வுலகில், கர்ணனுடைய இந்தக் குறைப் பாட்டைச் சொல்லி இழித்துப் பேசுபவர்களுக்குப் பஞ்சமா? அவனுடைய இந்த அவல நிலையைப் போக்க முடிவு செய்தான் அவனுக்கு உற்ற நண்பனாகிய துரியோதனன்.

துரியோதனன் ஏனைய கெட்ட குணங்கள் அனைத் திற்கும் உறைவிடமாய் இருப்பினும், நட்பு என்ற பண்பாட்டில் மிகச் சிறந்தவனாய் இருந்தான்; ஊர், பேர் தெரியாத ஒருவனை- 'தேர்ப்பாகன் மகன்’ என்று எல்லாராலும் எள்ளி நகையாடப்பட்ட ஒருவனை- உற்ற நண்பனாகச் செய்து, அங்க நாட்டு அதிபதியாகவும் செய்தான். யாதொரு விதமான பயனையும் கருதி அவன் இவ்வாறு செய்யவில்லை என்பதை ஒரு நிகழ்ச்சி நன்கு. எடுத்துக்காட்டுகிறது.

ஒரு நாள், தான் சிற்றுலாப் போகும் பொழுது கர்ணனையும் உடன் வரவேண்டும் என்று அழைத்தான் துரியோதனன். ஆனால், தனக்குத் தலைநோவு இருப்பதால் வரவில்லை என்று கூறி விட்டான் கர்ணன். துரியோதனன் தனியே சென்று விட்டான். அவன் சென்ற, பிறகு அவன் மனைவியாகிய பானுமதி கர்ணனைச் சூது விளையாட வருமாறு அழைத்தாள் அவன் ஏகாந்த, மண்டபத்தில் அவளுடன் விளையாடத் தொடங்கினான். வாயிற்புறத்தை நோக்கி அவள் அமர்ந்திருந்தாள். ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் அவள் தோற்றுவிட்டாள். அந்த நிலையில், உலாவச் சென்ற துரியோதனன் மீண்டு வந்து விட்டான். கணவனைக் கண்டவுடன் எழுந்து மரியாதை செய்வதற்காக அவள் எழுந்தாள் ஆனால், தன்னிடம் தோற்றுவிட்டு அதைச் சமாளிப்பதற்காக, அவள் எழுகின்றாள் என்று தவறாக நினைத்த, கர்ணன், அவளுடைய சேலையின் மேலணிந்திருந்த,