பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 65


மேகலாபரணத்தைப் பிடித்து இழுத்தான். அவ்வாபரணத் தில் கோக்கப்பட்டிருந்த முத்துக்களும், மணிகளும் உதிர்ந்துவிட்டன. இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் துரியோதனன் அவன் எதிரே வந்துவிட்டான்!

ஏகாந்த மண்டபத்தில் சூதாடி, அவளுடைய மேகவாபரணத்தையும் பற்றி இழுத்த காட்சியை துரியோதனன் நேரே கண்டு விட்டான். எவ்வளவு நெஞ்சுரம் உடையவர்களுக்கும் மனம் கலங்கி விடுதல் இயல்புதானே? செய்வதறியாது மயங்கிய நிலையில் தலையைத் தொங்க விட்டுக்கொண்டு கர்ணன் அயர்ந்து விட்டான். ஆனால், துரியோதனன் எவ்விதமான விகற்பமும் கொள்ளாமல், "நண்பா, சிதறிய மணிகளை யெல்லாம் பொறுக்கி எடுத்தல் போதுமா, அல்லது கோத்தே தர வேண்டுமா? இதோ நான் இருக்கின்றேன்!” என்றானாம்.

கண்ணனது சூழ்ச்சியால் குந்தி தேவி கர்ணனிடம் வந்து, தான் அவனுடைய தாய் என்பதை நிரூபித்துப் பாண்டவர்களிடம் வருமாறு வேண்டுகிறாள அப் பொழுது நன்றி நினைக்கின்ற அந்தக் கொடைவள்ளல இந்த நிகழ்ச்சியை எடுத்துக் கூறுகிறான்.

மடந்தை பொன் திருமேகலை மணி உகவே
மாசு அறத் திகழும் ஏகாக்த
இடந்தனில் புரிந்தே யான் அயர்ந்து இருப்ப,
‘எடுக்கவோ? கோக்கவோ?’ என்றான்;
திடம்படுத்திடு வேல் இராசராசனுக்குச்
செருமுனை சென்று செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே எனக்கு இனிப் புகழும்
கருமமும் தருமமும்!" என்றான்

கு.- 5