பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 O அ. ச. ஞானசம்பந்தன்


திடீரென்று ஒரு பசுக்கன்று அவனுடைய தேர்ச் சக்கரத்தின் இடையே புகுந்து அகப்பட்டு, இறந்துபோய் விட்டது. உடனே தேரை நிறுத்தி, கீழே இறங்கிய அரச குமாரன், இக்கொடுமையைக் கண்டு பெரிதும் மனம் வருந்தினான். ஆனால், என்ன செய்யமுடியும்! செய்வது அறியாது மயங்கி நின்றுவிட்டான் மனுவின் மைந்தன்.

இந்நிலையில், கன்றை இழந்த தாய்ப் பசு வேகமாய் ஒடிச் சென்று, அரண்மனை வாயிலில் கட்டி இருந்த மணியைத் தன் கொம்புகளால் இழுத்து அடித்துவிட்டது. நீண்ட காலமாக உறங்கிக் கிடந்த மணி ஒலிக்கக் கேட்டுப் பதறிக்கொண்டு வெளியே வந்தான் மன்னன். மன்னனுக்கு நேர்ந்த பழியின் ஓசையோ என்று ஐயப்படும்படி அம்மணி ஒலித்தது.

வெளியே வந்த மன்னன், மணியின் பக்கத்தில் மக்கள் யாரையும் காணவில்லை; இரண்டு கண்களிலும் நீர் வழிய நிற்கின்ற பசுவைத்தான் கண்டான். தனக்கு நேர்ந்த துயரத்தை எடுத்துச் சொல்லப் பசுவுக்குப் பேசும் திறன் இல்லை. எனவே, பக்கத்தில் நின்ற அமைச்சர்களை, "நீங்கள் அமைச்சர்களாய் உள்ள நாட்டில் இப்படியும் ஒரு கொடுமை நேரலாமா?" என்று கேட்பவனைப்போல. இகழ்ச்சியோடு ஒரு பார்வை பார்த்தான்.

மன்னன் நோக்கைக் கண்டு அஞ்சி நின்ற அமைச்சர் களுள் முதிய அமைச்சன் ஒருவன், “அரசே, உம்முடைய புதல்வன் மணிகள் கட்டிய பெரிய தேரின்மேல் ஏறி அளவில்லாத படைகள் புடை சூழ அரசர்கள் உலாப் போகின்ற தெருவிலே செல்லும்பொழுது, இளைய ஒரு பசுக்கன்று, தேர்ச்சக்கரத்தின் நடுவே புகுந்து இறந்து விட்டது! இங்கு வந்து இம்மணியை அடித்த தாய்ப்பசு தான் இது," என்று கூறினான்.

அமைச்சருடைய வார்த்தைகளைக் கேட்ட மன்னன் விடம் தலைக்கேறியதுபோல வேதனை மிகுந்து, ஒன்றும்