பக்கம்:குறள் நானூறு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாள் போன்று கொடுமையான பகைவர் நேருக்கு நேர் வெளிப்படையாது எதிர்ப்பர். எனவே, எப் போதும் அவர் பகைபற்றி அஞ்ச வேண்டாம் ஆளுல், உறவினர் போன்று பழகிக்கொண்டே உள்ளே பகை செய்யும் உட்பகைவர் எவ்விடத்தும் எந்நேரத்தும் நேர்மையின்றித் தீங்கு விளைப்பர். அவரை எண்ணி அஞ்சிக் கவனமாக இருத்தல் வேண்டும். 286 செப்பினது அடியும் முடியும் கூடி இணைந்திருப்பது போன்று தோற்றம் அளிக்கும். ஆனால், இரண்டும் வேறு வேறே. அதுபோன்று உட்பகை உண்டான குடும்பம் ஒற்றும்ை போன்று தோற்றமளிக்கும், உள்ளம் பொருந்தாததால் வேறு வேருகிப் பிளவு படும். s 287 சிறு குடிசைக்குள் பாம்புடன் இணைந்து வாழ்தல் இயலாது. அது உள்ளே கொண்ட நச்சுக் குணத்தை எந்நேரத்தும் காட்டும். அதுபோன்று, உட்பகை கொண்டு மனம் ஒத்துப் போகாதவருடன் கூடி வாழ்தல் இயலாது. அவர் எந்த தே ரத்திலும் பகையை வெளிப் படுத்திக் கேடு செய்வர். 288 நுண்ணறிவிலும், நூலறிவிலும், பட்டறிவிலும் சிறந்தவர் பேரியார். அவரது அறிவுரைகளைப் போற் றிக் கடைப்பிடிக்க வேண்டும். அவரை மதிக்காமல் நடந்தால் அந்த நடத்தை அவர்க்குப் பிழை செய்த காரணமாக மாற்றமுடியாத துன்பத்தைத் தரும். 289 அறிவுத் தகுதியில் மாட்சிமைப்பட்ட பெரியாரை மதிக்காத பிழையைச் செய்தால், அவர் சினங்கொள் வர். அச்சினத்தின் முன் பல வகையால் மாட்சிமை யுள்ள வாழ்க்கையும், நிறைந்த செல்வமும் என்னுகும்? விரைந்து கெடும். 290

3 18 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/130&oldid=555627" இலிருந்து மீள்விக்கப்பட்டது