பக்கம்:குறள் நானூறு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையேந்தி நின்று இரத்தல் (பிச்சை கேட்டல்) மிக இழிவானது. அவ்விழிவும் ஒரு வகையில் அழகாகும். செல்வத்தை ஒளிக்காத உள்ளத்தால் ஈகைக் கடமையை அறிந்தவர் நல்லவர். அவர் முன்னே வகயேந்தி நின்று இரக்கலாம். அஃது ஒர் அழகை உடையது, %

ஈகைக் குனமுடைய செல்வர் ஈகை செய்தால் தான் புகழ் உண்டு. கையேந்தி நின்று பொருளைப் பெற்றுக்கொள்பவர் அவரை அணுக வேண்டும். அணுக வில்லையானல் எவ்வாறு புகழ் உண்டாகும்? 3.32

கையேந்தி நின்று இரந்துதான் உயிர் வாழ வேண்டும் என்று ஒரு விதி உண்டோ? அவ்வாருயின் அவ்விதியை விதித்து உலகை இயற்றிய இறைவனே, கையேந்தி இரப்ப கை: இர.ந்தவாறே எங்கும் பரவித் திரிந்து கெடுவாளுக! 。密岛

இரந்தால் அறுசுவை உணவும் கிடைக்கலாம். ஆளுல் தன் முயற்சி தந்த உணவு, தெளிந்த நீர் போன்று ஆக்கிய கூழே ஆனலும் அஃதே இனிது. அதனே உண்ணுவது போன்ற் சுவை அறுசுவை உணவிலும் இல்லை எனலாம். -- 334

"இரப்போரே! இல்லை என்று சொல்பவரிடம்

கையேநதி நிற்காதீர்' என்று யான் (திருவள்ளுவர்)இரப் போரையெல்லாம் கையேந்தி நின்று கேட்டுக்கொள் வேன், - . 3.35

$

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/148&oldid=555645" இலிருந்து மீள்விக்கப்பட்டது