பக்கம்:குறள் நானூறு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பொறிகளில் ஒன்ருே பலவோ இல்லாமை எவர்க்கும் வாழ்வில் பழி ஆகாது. உள்ள பொறிகளின் வழியாக அறிய வேண்டியவற்றை அறிந்து அததற் கேற்ற முயற்சி இல்லாதிருத்தலே பழி ஆகும். 201

தெய்வத்தின் துணையால் ஆகாத செயல்களாய் இருப்பினும் முயற்சி அதனே முடிக்கும். முயற்சி உடலை விருத்தி உழைக்கச் செய்வதால் உழைப்பிற்குரிய ஊதி யத்தைத் தரும். 202

காலந் தாழ்த்தாமல்-உரிய காலத்தில் சோர்வு பாராமல் முயற்சி செய்பவர் பெரும் வலிமையுடைய ஊழையும் புறங்காண்பர். 203

எடுத்த முயற்சியில் துன்பம் நேர்ந்தால் மனங் கலங்கக்கூடாது. அத்துன்பத்தைத் துணிவுடன் தாங்கி அதை எள்ளி நகைக்கவேண்டும். அந்த நகைப்பைப் போன்று துன்பத்தைத் தாங்கித் தள்ளி அதன்மேல் ஏறி ஊர்ந்து செல்வது வேறு ஒன்றும் இல்லை. 204

எருது தடை உண்டாகும் இடமெல்லாம் தளராது ஊன்றி இழுக்கும் அதுபோன்று தடைகளை எதிர்த்துத் தகர்ப்பவனே அடைந்த துன்பம் துன்பப்படும். 205

8品

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/96&oldid=555593" இலிருந்து மீள்விக்கப்பட்டது