பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

நல்லறம் உணர்ந்த நம்பி

உலக மக்களுக்கு உறுதுணையாய உயர்ந்த நீதிகளை உரைக்குங்கால், 'அறம் அறிந்தவன் நான்; ஆகவே, நான் கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்! என, ஆணவம் தோன்ற ஆணையிட்டுரைக்காது, அவற்றை உலகோர் உள்ளம் விரும்பி ஏற்குமாறு, இனிய சொற் களால் இரந்து நிற்பார்போல், எடுத்து இயம்ப Jುಖ சொல்லின் திறன் அறிந்தவன்; உணவின்றி வருந்திய உலகத்து உயிர்கள் எல்லாம் ஒருங்கே வந்து இரப்பினும், அவ்வனைத் துயிர்க்கும் உணவு முதலாயின அளித்துக் காக்கவல்ல அருள் உள்ளமும், அதற்கேற்ற ஆற்றலும் உடையான்; வாழ்க்கைக்கு வழிகாட்டும் அரிய நூல்களை ஐயத்திரிபறக் கற்று, கற்ற அந்நூல்களைக் கேட்பார் உளங் கொள்ளுமாறு உரைக்க வல்ல பேராசிரியர்களைத் தேடிச் சென்று, வணங்கி வழிபட்டு நின்று, அவர்பால் அந்நூற் பொருள்களை அறிந்த பேரறிவாளன்; நற்குண, நற்செய்கைகளால் நிறைந்த நல்லோர்களிடத்து மட்டுமே