பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 இ. புலவர் கா. கோவிந்தன்

காணலாம் தீயன உரைய்ா நாவடக்கமும், தீயன புரியாச் செயலடக்கமும் வாய்க்கப் பெற்றவன்; பொருள் இல்லாது, வருந்துவார்தம் வருத்தத்தை அவர் விரும்பும் பெரும்பொருள் அளித்துப் போக்கவல்ல உள்ள உறுதியும், அதற்குத் துணையாய பெரும் பொருளை ஈட்டவல்ல செயல் திறனும் சேரப் பெற்றவன்; அத்தகையான் ஓர் இளைஞன், பெண்மைக் குணங்களைக் குறைவறப் பெற்றாள் ஒருத்தியைக் கண்டு காதல் கொண்டான். அவளும் அவனைக் காதலித்தாள். ஆயினும், அவர்கள் கொண்ட காதல், அப் பெண்ணின் உயிர்த் தோழியின் துணையினைப் பெற்றாலன்றி நிலையாது, நிறைவேறாது என்பதை அவன் அறிந்தான்்.

அதனால், அவளைக் கண்டு காதல் கொண்ட மறுநாள், அத் தோழி தனித்திருக்கும் சமயம் நோக்கி, அவள்பால் சென்று, தன் ஆண்மை, அறிவுடைமை முதலாம் பெருமைகளை, அப்பெண்ணின்பாற் கொண்ட பெருங்காதலால் மறந்து பணிந்து, பின்நின்று, தான்் அப் பெண்ணைக் காதலிப்பதையும் அவளும் தன்பால் அன்பு கொண்டிருப்பதையும் கூறி, எங்கள் காதலை வாழ்த்தி வளர்க்கும் வழித்துணையாய் விளங்குமாறு நின்னை வேண்டிக் கொள்கிறேன்! என்றான். இவ்வாறு அவன் வேண்டிக் கொண்டது ஒரு நாள் இரு நாள் அல்ல: ஒரு முறை இரு முறை அல்ல; பலநாள் வந்து பலமுறை வேண்டிக் கொண்டான்.

அவ்விருவர்க்கும் இடையிடையே ஏற்பட்ட அக் காதல் உறவினை, அப்பெண், அவள்பால் அறிவித்திலள். ஆயினும், அவள் நிழல் போல் நின்று காக்கக் கடமைப்