பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 107

பட்டவளாய அத்தோழி, அதனை அறிந்து கொண்டுள் ளாள் ஆதலாலும், அதனால், அன்று முதலாகவே, அவ் விளைஞன் யாவன்? அவன் உற்றார் யார்? உறவினர் யாவர்? யாது அவன் பண்பு? என்பன போலும் செய்தி களை யெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளாள் ஆதலாலும், ஒரு நாள், அவன் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து, அதற்குத் துணை செய்வதாக வாக்களித்து விட்டாள்.

குறை கேட்டுத் துணை புரிய அவ்விளைஞனுக்கு உறுதியளித்த தோழி, அப்பெண்ணின்பாற் சென்று, காதல் கொண்டு, உள்ளத்தே அவ்வுணர்வு தோன்றினமையால், நெற்றி மணம் நாறுகின்றனை எனக் கூறுவாள் போல், 'நறுமணம் நாறும் நுதலினை உடைய நல்லாப்! 6T&T விளித்து, அவள்பால், அவ்விளைஞனைப் பற்றியும், அவன் பால் காணலாம் நற்பண்புகளையும், அவன் தன்பால் வந்து கூறும் குறைகளையும் கூறி, அவனை ஏற்றுக் கோடல் வேண்டும்! எனக் கூறினாள். தன் தோழி அவ்வாறு கூறக் கேட்ட அப் பெண், தான்் கொண்ட காதல் உறவினைத் தோழி அறிந்து கொண்டாள். ஆகவே, இனி அதற்கு அவள் துணை கிடைக்கும் என உள்ளம் ஒருபால் மகிழினும், அவள் பெண்மைக் குணம், தோழி கூறியவாறு, அவனை அப்போதே ஏற்றுக் கொள்ளச் சிறிதே தயங்கிற்று. அத் தயக்கம் கண்ட தோழி, அப்பெண் தன்முன் இருக்கவும், அவளைப் பிறர்போலக் கொண்டு பின் வருமாறு கூறத் தொடங்கினாள்.

"அவ்விளைஞனோ, உன்னைப் பெறாது என் உயிர் வாழாது! என்று கூறுகிறான். ஆனால் இங்குள்ளவர்