பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 இ. புலவர் கா. கோவிந்தன்

களோ, அவ்வாறு, பெறுதற்குரிய தன் உயிரையே பேணாது இழக்கத் துணியும் ஒருவன் சொல்லை எவ்வாறு நம்புவது? என்று கூறுகின்றனர். இந்நிலையில் இடை நிற்கும் யான் அன்றோ வருந்துகிறேன், என் வருத்தம் இங்குள்ள எவர்க்கு உளது?

"அவ்விளைஞனோ, நின் அன்பைப் பெறமாட்டாது வருந்துகின்றேன், இதனை நீ அறிந்திலை! எனக் கூறி இரக்கின்றான். அவன் யாவன்? யாது அவன் இயல்பு? அவன் அன்பு உண்மை அன்புதான்ோ? அவனை நம்புதல் ஒண்னுமோ? என்பனவற்றைப் பெண் ஒருத்தி, தனியே இருந்து ஆராய்ந்து முடிவு காணல் அரிதினும் அரிதாம். ஆகவே, அவள், தனக்கு வேண்டிய தோழியோடு கூடிக் கலந்து இருவருமாக ஆராய்ந்து முடிவு காணல் வேண்டும். ஆனால், அவள், அதைச் செய்யாது வாளா இருக்கின்றனள். இந்நிலையில், அவ்விளைஞன் அன்பிற்குக் கட்டுப்பட்ட என் போல் வருந்துவாரும் உலகில் இருப்பரோ? உறுதியாக ஒருவரும் இரார். என்னே இக் கொடுமை!

"அவ்விளைஞனோ, நீ என் அன்பை ஏற்றுக் கொண்டு அருள் புரியாயாயின், யான் உயிர் வாழேன்! என்று கூறுகின்றான். ஆகவே, அவ்வாறு அன்பு பூண்டானை ஏற்றுக் கொள்வதே அறிவுடைமை. அதை நின் பெண்மை தடை செய்கிறது. அது கண்ட பிறர், உன்னை, அறிவிலி எனக் கூறுகின்றனர். பேரறிவு பெற்ற வளாய உன்னை அறிவிலி என அழைத்தல், நினக்குப் பழியாகத் தோன்றுகிறது. இந்நிலைக்கு யாது செய்வது என்பதை அறிய மாட்டாது வருந்துகின்றேன். ஆகவே,