பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 109

அன்புடையாய்! நாம் இருவரும் கூடி ஆராய்ந்து ஒரு நல்ல முடிவு காணலாம், வருக!”

இவ்வாறு கூறியவள், சிறிது இடையிட்டு, மீண்டும் தொடங்கிப், பெற்ற தாயினும் பெரிதாகப் பேணிக்காக்க வேண்டிய நாண், நம்பால் இருந்து வருத்துவதால், அவனை ஏற்றுக் கொள்ளாது, போகவிடுதல், நின்னைப் பெற இயலாது போயின், இறப்பதே இனிதாம்! எனத் துணிந்து நிற்கும் அவன் நிலை கண்ட நமக்குப் பொருந் தாது. அவ்வாறு போகவிடாது, ஏற்றுக் கொள்வோம் எனிலோ, அயலான் ஒருவனைப் பெண் ஒருத்தி ஆட் கொண்டாள்! எனப் பிறர் பழிகூற நடந்து கொள்ளுதல் நம் பெண்மைக்குப் பெர்ருந்தாது. நம் நிலைமையோ இது. ஆனால் அவ்விளைஞனோ, இதையெல்லாம் எண்ணிப் பாராது, நின் நெஞ்சைத் தனதாக்கிக் கொள்ளத் துணிந்து விட்டான். ஆகவே, இனி எதையும் எண்ணிப் பாராது, அவனை ஏற்றுக் கொள்வதே அறிவுடைமையாம்!” எனக் கூறினாள்.

அவள் அவ்வாறு கூறியும், அப் பெண் அவனை ஏற்றுக் கொள்ளத் தயங்குவது கண்டு, "இனித் தயங்குவ தில் பயனில்லை. அவன் வேண்டுகோளுக்கு இசைந்து விட்டேன். அவனை ஒரிடத்தே இருத்திவிட்டு வந்துள்ளேன். ஆங்குச் சென்று, அவன் குறையேற்று, அன்பு செய்வதே அறிவுடைமை" என்று, தன் துணி வினைக் கூறுவாள், அதை அவளை நோக்கிக் கூறாது தன் நெஞ்சை நோக்கிக் கூறுவாள் போல, நெஞ்சே! அவ் விளைஞன்பால் சென்று, அன்ப! நின்குறையினை ஏற்றுக் கொண்டேன்! ஆகவே வருக! எனக்கூறி, அவன் விரும்பும்