பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 இ புலவர் கா. கோவிந்தன்

இடத்தே சென்று இருப்பாயாக!' எனக் கூறினாள் தோழி. இவ்வளவும் கூறவே, இனியும் தயங்குவது கூடாது எனும் கருத்தினளாய், அப்பெண் அவன் அன்பினைச் சென்று ஏற்றுக் கொண்டாள்.

இளைஞன் குறையேற்றுக் கொண்ட தோழி, அதைக் குறைவற முடித்தற் பொருட்டு, நடித்த நாடகத்தின் நல்ல காட்சிகளை, அழகொழுகும் ஒவியமாக வரைந்து காட்டுகிறது இச் சொல்லோவியம்:

“ஒன்று, இரப்பான் போல், எளிவந்தும் சொல்லும்; உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன்; வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான்் போல், நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்; இல்லோர் புன்கண் ஈகையில் தணிக்க 5

வல்லான் போல்வதோர் வன்மையும் உடையன்; அன்னான் ஒருவன், தன் ஆண்தகை விட்டு, என்னைச் சொல்லும் சொல் கேட்டி, சுடர்இழாய்! பன்மானும் 'நின்இன்றி அமையலேன் யான்'என்னும் அவனாயின்;

அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிதாயின் 10 என்.உற்ற பிறர்க்கும் ஆங்கு உளகொல்லோ? நறுநுதால்? 'அறிவாய் நீ வருந்துவல் யான் என்னும் அவனாயின்; தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிதாயின்; அளியரோ எம்போல ஈங்குஇவன் வலைப்பட்டார்! ‘வாழலேன் யான் என்னும் நீநீப்பின் அவனாயின், 15 ஏழையர் எனப்பலர் கூறும்சொல் பழியாயின், சூழுங்கால் நினைப்பதொன்று அறிகிலேன், வருந்துவல்;