பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

களிறும் புலியும் மயங்கிய காடு

ஒளி உட்புகாவாறு ஓங்கியும், உயர்ந்தும், அடர்ந்தும் வளர்ந்த மரங்களைக் கொண்ட ஒரு பெருமலை. அம் மலையில் தோன்றப் பெருக்கெடுத்தோடும் ஒரு பேராறு. அவ்வாற்றின் இடையிடையே அடர்ந்த காடுகள், அம்மலைக் காடுகளையும், ஆற்றிடைக் குறைக்காடுகளை யும் இடமாகக் கொண்டு வாழும் யானைக் கூட்டங்கள்; வேங்கை மலர் போலும் புள்ளிகளையும், மழையென ஒழுகும் மதநீரையும் பெற்றுள்ளமையால், தேன் உண்ணும் வண்டுகள் திரண்டு மொய்க்கும் நெற்றியுடையன; எட்டுத் திசைகளையும் காக்க வல்லன, பகைத்தவை எவையும் எதிரில் நிற்க மாட்டாது அஞ்சி ஒடவல்ல வன்மை வாய்த்தன! என, அக் களிறுகளின் ஆற்றல் கண்டு அஞ்சாது, கழுத்துப் பருத்துப் பெருவலிகொண்ட புலிகள், அவற்றைத் தாக்கிப் போரிடும் காட்சிகள். இவ்வாறு ஆறும் மலையும், மாவும் மரமும் பெற்று வளம் நிறைந்து விளங்கும் நாட்டிற்கு உரியான் ஒர் இளைஞன், தன்