பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 புலவர் கா. கோவிந்தன்

அல்லது என்பால் அன்பு அற்றுப்போக, வாராதே இருந்து விட்டனனோ!' என எண்ணித் துயர் உறுவள். இதனால், அவள் துயர் பன்மடங்காய் வளர்ந்தது. அவள் தோள்கள், முன் கையில் அவள் அணிந்திருந்த ஒளிவீசும் அழகிய வளைகள் தாமே கழன்று ஒடுமாறு மெலிந்தன. கண்கள் எப்போதும் நீர் நிறைந்து கலங்கி ஒளி இழந்தன. உடல் பசலை படரவே, பொன்னிறம் வென்ற தன் நிறம் கெட்டுக் காட்சி அளித்தது.

அவள் தோளின் தளர்ச்சியையும், கலங்கிய கண்ணின் நீரையும், மேனிப் பசலையையும் கண்டு, அவள் களவொழுக்கம் உணர்ந்த ஊரும், சேரியும் அவள் ஒழுக்கம் குறித்துப் பலவாறு கூறத் தொடங்கினர். அது கேட்ட தாய், அவளைச் சிறையிட்டுக் காத்தாற் போல், இணை பிரியாதிருந்து காக்கத் தலைப்பட்டாள். ஊரார் உரைக்கும் அலராலும், தாய் மேற்கொண்ட காவலாலும், அப்பெண்ணின் கவலையும் கலக்கமும் கண்டாள் அவள் தோழி! அந்நிலை மேலும் நீளின், அவள் உயிர் வாழாள் என உணர்த்தாள். அதனால் அவ்விளைஞன் ஆண்டு வருங்கால், அவன்பால் அவள் நிலை உணர்த்தி, வரை விற்கு வழி செய்தல் வேண்டும் என முடிவு செய்தான்். அதனால் அவன் வரவினை எதிர்நோக்கியிருந்தாள்.

அப்பெண், இவ்வாறு துயர் உழக்கின்றாள் என்பதை உணராமையால், அவளை மணந்து, என்றும் பிரியாது உடன் இருந்து, அவள் துயர் துடைக்க எண்ணாது, களவில் வந்து கண்டு மகிழ்ந்து செல்வதையே மனங் கொள்ளும் அவ்விளைஞன், தோழி எதிர் நோக்கியிருந்த