பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 115

வாறே, ஒரு நாள் ೩ಠ வந்தான்். வந்தான்ைத் தோழி எதிர்சென்று வணங்கி வரவேற்று, வாழ்த்திய பின்னர், "அன்ப! இரவென்றோ, பகலென்றோ, மழையென்றோ பாராது, நின் வருகையை எதிர்நோக்கியிருந்தும், காட்டுக் கொடு விலங்குகளாலும காட்டாற்று வெள்ளத்தாலும், இடைவழியில் உண்டாம் ஏதத்தை எண்ணி நடுக்கங் கொண்டும், உறங்காது, உணர்விழந்து கிடக்கிறாள் இப் பெண். உன் மலைச் சாரலில் வெண்காந்தள் மலர்கள், வெய்யிலால் வாடிக் காம்பற்றுக் கழன்று, தாமே உதிர்தல் போல், இவள் கைவளைகள், தோள் தளர்ந்து போகவே, அக்கையை விட்டுத் தாமே கழன்று ஓடுகின்றன; உன் மலைச் சுனைகளில் மலரும், கருநீல மலர்கள் நீர் நிறைந்து நிற்றல்போல், இவள் கண்களும் நீர் நிறைந்து கலங்கிக் காட்சியளிக்கின்றன; தெளிந்த நீர் சிறிதே ஒடி ஒலிக்கும் காலமாய இளவேனிற்காலத்தில், நிறங்கெட்டுத் தோன்றும் தளிர்கள்போல், இவள் மேனி தன் பொன்னிறம் இழந்து பசலை பாய்ந்து தோன்றுகிறது. இவ்வாறு வருந்தும் இவளைத் தேற்றும் வழியினை யான் அறியேன். எந் நேரமும் நின் நினைவே கொண்டு, உறங்காதிருந்து துயர மிகக் கொள்வதனாலேயே, இவள் உடல் தளர்கிறது. ஆகவே, இவள் சிறிதே உறங்கின், அக்காலத்தே இவள் உணர்வு அடங்க உள்ளத் துயர் சிறிதே குறைதலும் கூடும் என எண்ணி, இவளை உறங்க வைக்கலாம் எனிலோ, எப்போதும் நின் நினைவாகவே இருப்பவளாதலின், உறக்கத்தில் நின்னைக் கண்டு கலந்து உரையாடி மகிழ்ந்த தாகக் கனவு காணலும் கூடும். அவ்வாறு கனவு கண்ட