பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 嫁 புலவர் கா. கோவிந்தன்

வள், உறக்கம் தெளிந்ததும், நின்னைக் காண மாட்டாது ஏமாற்றம் அடைவள். அதனால், இவள் துயர் முன்னினும் அதிகமாம். அதனால் இவள் உறக்கம் கொள்வதையும் யான் அஞ்சுகின்றேன். இவள் இவ்வாறு வருந்தக் கண்டும், நீ வாளா இருக்கின்றனை. இவள் உனக்குச் செய்த தவறு யாதேனும் உண்டோ? இல்லையாகவும், இவளை நீ வருத்துவது ஏனோ? அன்ப! வருத்தியது போதும்; வரைந்து, வாழ்க்கைத் துணையாகக் கொண்டு, வருத்தம் போக்கி, நெடிது வாழ்வாயாக! இதுவே இவள் ஆசையும், என் வேண்டுகோளுமாம்!” எனக் கூறி, வந்தான்ை வரைவொடு வருமாறு கூறி வழி அனுப்பினாள்.

தோழியின் வழியனுப்பு உரையினை வழங்குகிறது இச் செய்யுள்: "ஆம்இழி அணிமலை அலர்வேங்கைத் தகைபோலத் தேம்மூசு நணைகவுள், திசை காவல் கொளற்குஒத்த, வாய் நில்லா வலி முன்பின், வண்டு ஊது புகர்முகப் படுமழை அடுக்கத்த; மாவிசும்பு ஓங்கிய கடிமரத் துருத்திய, கமழ்கடாம் திகழ்தரும் 5 பெருங்களிற்று இனத்தொடுவீங்கு எருத்து, எறுழ்முன்பின் இரும்புலி மயக்குற்ற இகன்மலை நன்னாட! வீழ்பெயல் கங்குல் நின் விளி ஒர்த்த ஒடுக்கத்தால் வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறுண்டோ? தாழ்செறி கடுங்காப்பின் தாய் முன்னர் நின்சாரல் 10 ஊழுறு கோடல் போல் எல்வளை உகுபவால்!

இனைஇருள் இதுஎன ஏங்கி நின் வரல் நசைஇ நினைதுயர் உழப்பவள் பாடில்கண் பழிஉண்டோ?