பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 117

இனையள் என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர்

- நின்சுனைக் கனைபெயல் நீலம்போல் கண்பனி கலுழ்பவால்! 15

பன்னாளும் படர்அடப் பசலையால் உணப்பட்டாள் பொன்உரை மணியன்ன மாமைக்கண் பழி உண்டோ? இன்னுரைச் செதும்பு அரற்றும் செவ்வியுள் நின்சோலை மின்உடு தளிர் அன்ன மெலிவு வந்து உரைப்பதால்!

எனவாங்கு, W 20

பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவிப்

பூங்கண் படுதலும் அஞ்சுவல் தாங்கிய

வருந்துயர் அவலம் தூக்கின், மருங்குஅறி வாரா மலையினும் பெரிதே'

வரையாது வந்து செல்லும் தலைவனுக்குத், தோழி, தலைவியின் ஆற்றாமையும், இவ்வொழுக்கம் அலராயினமையும் கூறி வரைவு கடாயது இது.

உள்ளுறை மலையிடத்தும், ஆற்றிடைக் குறையிடத் தும் வாழும் இருவகை யானைகளோடும் புலி மாறுபட்டுப் பொருதல், தலைவியின் தந்தை சுற்றம், தாய் சுற்றம் ஆகிய இருவகைச் சுற்றத்தாரையும் அஞ்சாது, அயலார் அலர் கூறுதலாம் என்க.

1. ஆம்-நீர்; இழி-வீழ்கின்ற, தகை-அழகு, 2. தேம்தேனீக்கள்; மூசு-மொய்க்கும்; நணைகவுள்-மதநீரால் நனைந்த கன்னம், 3. வாய்-இடம்; வாய்நில்லா-எதிர்நிற்க மாட்டாத, முன்புவலி; 4. அடுக்கம்-மலைச்சாரல்; அடுக்கத்த-மலைச்சாரலைச் சார்ந்த யானைகள், 5. கடிமரம்-மிக்க மரங்கள்; துருத்தி-ஆறுகளின் இடையிடையே அமைந்த திட்டுகள்; ஆற்றிடைக்குறை-அரங்கம் எனவும் அழைக்கப் பெறும், 6. எருத்து-கழுத்து: எறுழ-மிக்க, 8.