பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ஒ புலவர் கா. கோவிந்தன்

விளி-அழைக்க எழுப்பும் ஒலி, ஒர்த்தல்-ஒலி கேட்கிறதா என்பதை நுணுகி இருந்து ஆராய்தல்; 10. தாழ்செறி-தாழ்ப்பாள் இட்டு அடைத்தாற்போல்; 11. ஊழ்-வரிசை கோடல்-வெண்காந்தள்; எல்வளை-ஒளிவீசும் கைவளைகள்; உகுப-கழன்று வீழும்; 12. இணை-வருந்துதல்; இணை இருள்-உயிர்கள் வருந்துதற்காம் மிக்க இருள் நசைஇ-நச்சி, 13. நினை துயர்-நினைப்பதால் உண்டாம் துயர்; பாடு இல்கண்-உறக்கம் இல்லாத கண், 14. அரற்றும்-அலர் கூறும்; 15, கலுழ்ப-சொரியும், 18. செதும்பு-சிறிதே ஒடும் அருவி நீர், செவ்வி-காலம், 19. மின்-ஒளி, 20. உகு-கெட்ட, 21. பின்ஈதல்-உறவு ஒன்றுபடுதல், நீவி-போக்கி.