பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

இரவில் வாரல்

அன்பும் அருளும் ஆற்றலும் அழகும் வாய்ந்த ஒர் இளைஞன், கரு நீல மலரை வென்ற கண்கள், இருளையும் பழிக்குமளவு கறுத்து இருண்டு நீண்ட கூந்தல்; இவை போல், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையால் உயர்ந்து விளங்கும் உறுப்புகளைப் பெற்ற பெண்ணொருத்தியை, அவள், அவளுக்குரிய தினைக்கொல்லையில் காவல் மேற் கொண்டிருந்த காலத்தில் கண்டு காதலித்தான்். அவளும் அவனைக் காதலித்தாள். இருவரும், ஒருவர் இன்றி ஒருவர் வாழமாட்டா உயர்ந்த அன்புடையராயினர். அன்றுமுதல், நாள்தோறும் அவ்ன், அத் தினைப் புனத்திற்கு வந்து, அவளைக் கண்டு அகமகிழ்ந்து செல்வானாயினன். இவர் கள் உறவினை, அப்பெண்ணின் உயிர்த் தோழி ஒருத்தியே அறிவாள். அவள் உற்றார் உறவினர் எவரும் அறியார். இந் நிலையில், தினை முற்றி விடவே, இனிக் காவல் தேவை யில்லை என உணர்ந்த பெண்ணின் பெற்றோர், அவளை வீட்டிற்குக் கொண்டு சென்று விட்டனர். அதனால், தான்்