பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 ↔ புலவர் கா. கோவிந்தன்

வேண்டும் பொழுதெல்லாம் வந்து மகிழ்ந்து சென்ற அவனுக்கு, அவளைக் காணலும் அரிதாயிற்று. இரவில் எவரும் அறியாதவாறு வரத் தொடங்கினான். அவன் வருகை ஒருநாளும் தவறியதில்லை. எனினும், அவளைக் காண்டல் ஒரு நாளும் வாய்க்கவில்லை.

அவ்வூருக்குப் புதியனாய அவனைக் கண்டு அவ்வூர் நாய்கள் குரைப்பதால், தன் வருகையினை ஊரார் உணர்ந்து விடல் அஞ்சி ஒரு நாள்; நடு இரவிலும் உறங்காதிருந்து நகர்க்காவல் மேற்கொண்டு வாழும் ஊர்க் காவல் உலாவக் கண்டு ஒரு நாள்; நிலாப் புறப்பட்டு ஒளி வீசுவதால் மறைந்து செல்ல மாட்டாமையால் ஒரு நாள்; கூறிய இடையூறு எதுவும் இன்றி, அவள் வீடு சென்றடையி னும் ஆங்கு அப் பெண்ணின் தாய் துயிலாது விழித்திருப்ப தால், அப் பெண் வெளிவர மாட்டாமையால் ஒரு நாள்; வந்து முன்கூட்டியே அறிவித்திருந்தவாறு, அவள் வீட்டை அடுத்திருந்த நீர்நிலையில் கல் விடுவதாலும், மரத்தில் கல்லெறிந்து, ஆங்கு வாழும் பறவைகளை எழுப்புவதாலும் ஒலி எழுப்பித் தன் வருகையை அறிவிப்பவும், அவன் வருவதற்குச் சிறிது நாழிகை முன்னரே, மரத்துக் காய் ஒன்று, காம்பற்றுத் தான்ே வீழ்ந்ததாலும், வேறு யாது காரணத்தாலோ பறவைகள் தாமே எழுந்து அடங்கியதா லும், இயல்பாக எழுந்த ஒலிகேட்டு, அதை அவன் செய்த குறியாகக் கொண்டு, வெளிச்சென்று, ஆங்கு அவனைக் காணாது, கலங்கி வறிதே மீண்ட அப்பெண், இம்முறை, அவனே வந்து எழுப்பிய ஒலியையும் முன்னவற்றைப் போன்றே, இயல்பாக எழுந்ததாகக் கொண்டு வாராதே இருந்து விடுவதால் ஒரு நாள்; என்ற வகையில் அவளைக் காணமாட்டாது வறிதே மீள்வன். இதனால், தொடர்ந்து