பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 121

பலநாள் காணமாட்டாமையால், அப்பெண் கவலையும் கண்ணிரும் கொண்டு துயர் உற்றாள்.

அது மட்டுமன்று: அவன் வரும் வழி கொடுமைகள் மிக்கது. தன்னை வந்து தாக்கிய புலியொடு போரிட்டு வென்ற யானை, அப் போரால் உற்ற வருத்தம் வருத்த ஓய்ந்து உறங்கியிருந்த போது, புலியொடு தான்் செய்த போரை நினைத்துக் கொண்டே உறங்கியமையால், புலியொன்று தாக்க வருவதாகக் கனாக்கண்டு, திடும் என உறக்கம் கலைந்து எழுந்து நின்று நோக்க, ஆங்குப் புதிய மலர் பூத்துப் பார்ப்பதற்குப் புலிபோலக் காட்சியளித்து நின்ற வேங்கை மரத்தைக் கண்டு, புலியைப் பற்றிய எண்ணமே தலைதுாக்கி நின்றமையால், அதைப் புலி யெனவே கருதிக் கோட்டாற் குத்தி அழித்துப் பின்னர்ச் சினம் சிறிது ஆறியதும், அது வேங்கைப் புலியன்று. வேங்கைமரம் என உணர்ந்து, சினத்தால் அறியாது செய்த தன் சிறுசெயல் நாணி, அம்மரத்தைக் காணவும் வெட்கித் தலை குனிந்து செல்லும் கொடுமை மிக்கது அக் காட்டு வழி. அம்மட்டோ! மழைதரு மேகங்கள் வந்து தங்குமளவு உயர்ந்த அம்மலைகள், கண்டாரைப் பற்றி வருத்தும் சூரர மகளிர் வாழ்விடமாகக் கொண்டு வாழும் கொடுமையும் உடையது.

இத்தகைய கொடிய கானகத்தில், இடியும் மின்ன லும் கூடிப் பெருமழை பெய்யும் இராக்காலத்தில், மணம் வீசும் மலர்மாலை அணிந்து, கையில் ஏந்திய வேல் ஒன்றே துணை செய்ய, மின்னல் காட்டும் ஒளியல்லாது, வழி காட்டவல்ல விளக்கம் வேறு எதுவும் இன்றித் தனித்து வரின், காட்டாறுகளாலும், கனையிருளாலும், கண்ணிற் பட்ட பொருளை யெல்லாம் பகையெனக் கொண்டு