பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 புலவர் கா. கோவிந்தன்

பாயும் களிறுகளாலும், மலர் மணம் விரும்பும் அத்தெய்வ மகளிராலும் அவனுக்கு இடையூறு உண்டாமே என்ற எண்ணம், அவள் துயர்க் கொடுமையை அதிகரித்தது. அதனால், அவன் இக்களவொழுக்கம் கைவிட்டுக் கடி மணம் புரிந்து கொள்ள மாட்டானா என எண்ணி எண்ணி ஏங்கினாள். இவ்வச்சமும் கவலையும் அவள் உடல் நலனைக் குறைத்து, உருவிழக்கச் செய்துவிட்டன.

தளர்ந்த அவள் உடல்நிலை கண்ட அயலார், அவள் ஒழுக்கத்திற்கு இழுக்கம் கற்பித்து அலர்துற்றத் தொடங்கி னர். அது கேட்ட அவள் அன்னையும், அன்புடைச் செவிலியும், அவளை அவ்வலர் குறித்து வினவ, அவர்க்கு, நீர் ஆடினேன், கண் சிவந்தது! ஊசல் ஆடினேன், உடல் தளர்ந்தது!’ என்பன போல்வன, கூறித் தளர்ச்சிக்கும் காரணம் பிறிது கற்பித்துக் காதலை மறைத்து ஒருவாறு தேற்றித் துயிலச் சென்றாள். இளைஞனைக் காணாது வருத்திய வருத்தமும், அயலார் கூறும் அலரும், அது கேட்டுத் தாய் கூறும் கடுஞ்சொல்லும், அவளுக்குத் தான்் உரைத்த பொய்யும் நினைவிலே நிற்க உறங்கச் சென்றவள், அந்நிகழ்ச்சிகள் கனவிலும் நிகழக்கண்டு அஞ்சி எழுந் தாள். எழுந்தவள், தன் முன் தோழி நிற்கக் கண்டு, நான் இவ்வாறு துயர் உறவும், என் துயர் துடைக்கும் வழியாம் திருமணத்திற்கு வழி செய்யாது. களவொழுக்கத்திற்குத் துணை போவாள் இத்தோழியன்றோ?' என்ற எண்ணம் எழ, அவளைச் சினந்து கொண்டாள். சினம் சிறிது தணிந்த பின்னர், என் பெண்மையும் பெருமையும் கற்பும் காதலும் ஒருங்கே வாழ உறுதுணை புரியும் இவளை, என் அறியாமையாற். சினந்து கொண்டேன்! என்னே என்