பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 123

மடமை!’ என்ற எண்ணம் எழவே, வெட்கித் தலைகுனிந்து தோழியைக் காணவும் நாணினள்.

இவற்றையெல்லாம் அறிந்தாள் தோழி. இனி வரை தற்கு வழி செய்யாது போயின், இவள் உயிர் நில்லாது. ஆகவே, வரைந்து கொள்ளும் எண்ணம் இன்றி, வந்து செல்லும் இளைஞன் வருகைக்குத் தடை விதித்து, வரைவிற்கு வழி செய்தல் வேண்டும் எனத் துணிந்தாள். துணிந்தவள், அன்போடு வருவானை, வாய் திறந்து 'வாரற்க எனக் கூறல் நாகரிகமாகாது. காண்பார்க்கு, 'வருக! வருக! என வரவேற்பது போன்றே தோன்றுதல் வேண்டும். அதைக் கேட்கும் அவனுக்கு, வாரற்க என அவன் வருகையைத் தடை செய்வதே கருத்தாம் என்பதை உணர்த்துவனவாதலும் வேண்டும். இவ்விரு பயனையும் தரவல்ல சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கூறுதல் வேண்டும் எனக் கருதி, அவன் வருகையை எதிர்நோக்கி யிருந்தாள். அவள் எதிர் நோக்கியிருந்தவாறே, ஒருநாள் இரவு இளைஞன் ஆங்குவந்தான்். அவனை அன்புரை கூறி வரவேற்ற தோழி, "அன்ப! இவள்பால் நீ கொண்டுள்ள காதலைக் கண்டு மகிழ்கின்றேன். அப்பேரன்பால், இடியும் மின்னலும் கலந்து கொடுமை செய்யும் இரவுக் காலமா யிற்றே எனக் காலத்தின் கொடுமையினையோ, கண்ணிற் பட்ட பொருள்களை அழிப்பதே கருத்தாய்க் களிறுகள் வழங்குவது, ஆடவரைப் பற்றி வருத்தும் பெண் தெய்வங் கள் வாழும் மலைகளை அடுத்துச் செல்வது என வரும் வழியின் கொடுமையினையோ மனத்திற் கொள்ளாது, வருகின்றனை, அத்தகைய நின் பேரன்பைப் பாராட்டு கின்றேன். அது வாழ்க! வளர்க! என வாழ்த்துகின்றேன். ஆனால், அவ்வன்பின் மிகுதியால், கொடுமைகள் நிறைந்த