பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 o புலவர் கா. கோவிந்தன்

அவற்றின் அடிச்சுவட்டினைப் பின்பற்றிச் சென்று, அவற்றைத் தேடித் திரிவான்போல் தோன்றினான். ஆயினும், அவன் பேரழகு தோன்றத் தலையில் அணிந்து கொண்டிருக்கும் மணம் நாறும் பன்னிற மலர் கொண்டு தொடுத்த கண்ணி, வேட்டையாட வந்தவனல்லன் அவன் என்பதை எடுத்துக் காட்டுவதாய் இருந்தது.

வந்த அவன், அவள் வரும் வழியில், அவள் வருகையை எதிர்நோக்கி இருப்பான்போல இருந்து, அவ்வழி வரும் அவள் நோக்கம், தன்மீது விழுமாறு அவளையே ஊன்றி நோக்கினான். அவன் அவளைப் பார்த்த பார்வை, அவன் யாதோ ஒன்றை அவள்பால் கூற எண்ணுகின்றனன் என்பதை உணர்த்திற்று. ஆனால், அவன் வாயினின்றும் சொற்கள் வெளிப்பட்டில; என்றாலும், அவன் உள்ளத்தில் யாதோ ஒரு குறை உளது. அக் குறையினை அவள்பால் கூறி, அவள் துணை பெற்று, அதைப் போக்கிக் கொள்ளத் துடிக்கிறது அவன் உள்ளம் என்பதை, அவன் தோற்றமும், அவன் நிற்கும் நிலையும், அவன் முகக் குறிப்பும் நன்கு உணர்த்தின.

ஆயினும், அவன், அவள்பால் யாதொன்றும் உரைக்காமலே, சிறிது நாழிகை அவளையே பார்த்திருந்து விட்டு, அவ்விடத்தின் நீங்கிச் சென்று விட்டான். இக் காட்சியைத் தோழி, கடந்த சில நாட்களாகவே கண்டு வந்தாள். -

இடைவழியில் அவ்விளைஞனையும், அவன் நிலையையும் சில நாட்களாகவே கண்டு வந்த தோழி, ஈண்டுப் பரண்மேல் நிற்கும் அப்பெண்ணை நோக்கினாள்.