பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 11

அவள் இயல்பிலும் மாறுதல் இருக்கக் கண்டாள். கையில் கவணேந்தி நிற்கும் அவள், கிளிகள் புனத்தில் படிந்து, தினைக் கதிர்களைக் கொய்து கொண்டு போகவும், அவற்றை ஒட்ட எண்ணாது, தன் கடமை மறந்து கருத்திழந்து நிற்கும் நிலையினைக் கண்டாள்.

சின்னாட்களாகவே, அவள் போக்கில் புதுமை புகுந்துளதைக் கண்டு வந்தாள்; அவள் கூந்தல் இதுவரை இல்லாப் புதுமணம் பெற்றுள்ளது: கண்கள் பிள்ளைப் பருவத்துக் கள்ளமற்ற பார்வையை இழந்து, புத்தொளி வீசத் தொடங்கி உள்ளன. மண்வீடு கட்டியும் மணற்சோறு ஆக்கியும் மகிழ்ந்தாடும் ஆடல்களை வெறுக்கிறாள். உண்ணும் உணவினும் உள்ளம் செல்லவில்லை. எச் செயலையும் தோழி அறியச் செய்துவந்தவள், இப்போது, தான்் செய்யும் செயலைத் தோழி அறியாதவாறு செய்வ தில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளாள். பண்டுபோல், யாண்டும் ஒடி ஆடித் திரியாது, ஓரிடத்தே அடங்கி யிருத்தலை விரும்புகிறாள். முன்னெல்லாம் செவிலியின் மடியிற் கிடந்து உறங்கியவள், இப்போது உறங்கத் தனியிடம் நாடிச் செல்லுகிறாள். இதையும் உணர்ந்து வந்தாள் தோழி.

"வில்லேந்தி வேட்டைக்கு வந்து, வழியில் தன்னைக் கண்டு, தன்னிலை மறந்து சென்ற அவ் விளைஞன் செயலுக்கும், கவண் கைக்கொண்டு கிளியோட்ட வந்து, கிளிகள் தினை உண்ணக் கண்டும், அவற்றைத் துரத்தும் கருத்திலளாய் நிற்கும் இவள் செயலுக்கும் யாதோ ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும்! வேட்டையாடும் வேட்கை அவனுக்கும் இல்லை; திணைப்புனக் காவல்