பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ஜ் புலவர் கா. கோவிந்தன்

இவளுக்கும் கருத்தன்று; இருவர் உள்ளத்தும் மறைந்து உறைவது ஒன்று உண்டு!

"இருவர் செயலையும், இருவர் நிலையையும் உற்று நோக்கின், ஒருவரை யொருவர் கண்டு காதலித்துள்ளனர். தம் காதல் உறவிற்கு என் துணை இன்றியமையாதது என்பதை உணர்ந்து, அதைப் பெறத் துடிக்கின்றான் அவ்விளைஞன். ஆனால், இவளோ இக்காதல் உறவினை யான் அறியேன் என எண்ணுகிறாள். அது மட்டுமன்று; அதை என்பால் உணர்த்தவும் நானுகிறது. இவள் பெண்ணுள்ளம். இவள் நிலை அதுவாயினும், இவள் உயிர்த் தோழியாய நான், என் கடமையில் தவறாது நின்று, இவளைக் காத்தல் வேண்டும்" எனத் துணிந்த தோழியின் உள்ளம் மேலும் சிந்திக்கத் தொடங்கிற்று.

"இவளோ உலகறியாச் சிறுபெண்; எதையும் தனித் திருந்து துணியும் தகுதியிலாதவள். ஆயினும் இவள் பெண்மையும், பருவமும் இவளுக்கோர் காதலனைத் தேடித் தந்துவிட்டன; இவள் காதலும் தக்க இடத்திலேயே சென்றுளது. அவ்விளைஞன் தோற்றமும், அவன் பழகும் பண்பும், இவளுக்கு ஏற்றவனே என்பதை உணர்த்து கின்றன. ஆயினும் அக்காதல் வாழ்வினை, அவர்கள் தாமாகவே வளர்த்துக் கோடல் இயலாது. அதற்கு என் துணையும் வேண்டும். மேலும் அதற்குத் துணை புரிவது, இவள் உயிர்த் தோழியாய என் கடமையுமாகும். ஆகவே, இவள் வழியாக அவனையும், அவன்பால் இவளுக்குக் காதல் ஏற்பட்ட வரலாற்றினையும் அறிந்து துணைபுரிதல் வேண்டும். ஆனால், அவற்றை இவள்பால் அறிந்து கோடல் அத்துணை எளிதன்று; இவள் அதைத்