பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி 13

தான்ாகவே உரைக்க முன் வராள்; தன் காதல் ஒழுக்கத்தினைப் பிறர்பால் உரைக்க எந்தப் பெண்ணும் நானுவாள். மேலும் இவளோ, நாணம், மடம் முதலாம் பெண்மைக் குணங்களைக் குறைவறப் பெற்றவள். நான் இவள் உயிர்த்தோழியேயாயினும், இவள் அதை என்பால் வலிய வந்து உரையாள். இவள் அவன்பால் கொண்டுள்ள உறவினை யானும் அறிந்துள்ளேன் என்பதை அறியின், பின்னர் ஒருவாறு நாணம் தெளிந்து, அது நிகழ்ந்த வகையினை உரைப்பள். ஆகவே, அவர் உறவு எனக்குத் தெரியும் என்பதை எவ்வாறாயினும் இவளுக்கு அறிவித்து விடல் வேண்டும். ஆயினும், அதை வெளிப்படையாகக் கூறல் பண்பு ஆகாது. ஆகவே, குறிப்பினாலேயே உணர்த்தல் வேண்டும். மேலும், தன் காதல் ஒழுக்கத் தினைத் தன் உயிர்த் தோழியாய என்னிடமே மறைக்கும் இவளுக்கு யானும் ஒரு சிறு வேடிக்கை காட்டுதல் வேண்டும். கருதிய பயன் இரண்டும் விளையுமாறு நடந்து கொள்வேன்" என முடிவு செய்து கொண்டாள்.

பரண்மீது ஏறி அப் பெண்ணின் அருகில் அமர்ந் தாள். காதற் சிறப்பால் கவின்பெற்று விளங்கும் அவள் கண்களையும், நெற்றியையும் கண்டு மகிழ்ந்தாள். "நின் அழகு முன்னினும் மிக்குத் தோன்றுகிறது; அதற்கு நின் காதல் ஒழுக்கமே காரணமாம்," என்பதைக் குறிப்பால் உணர்த்துவாள் போல்-"நீர் நிறைந்த குளத்தில் அன்று அலர்ந்த நீல மலர்போல் தோன்றுகின்றன. நின் கண்கள்; நறுமணம் நாறுகிறது நின் நெற்றி!” என அவற்றைப் பாராட்டினாள்.