பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 இ. புலவர் கா. கோவிந்தன்

நெஞ்சு நெகிழ்ந்த செவ்வி காணுஉம், புலையர் போலப் புன்கண் நோக்கித்

தொழலும் தொழுதான்்; தொடலும் தொட்டான்; 20 காழ்வரை நில்லாக் கடுங்களிறு அன்னோன் தொழுஉம்; தொடுஉம்; அவன் தன்மை ஏழைத் தன்மையோ, இல்லை தோழி!”

தலைவிக்குக் குறை நேர்ந்தது. தன்னைக் குறை நயப்பக் கூறிய தன்பால் வந்த தோழிக்குத் தலைவி, தலைவன் இத்துணை இளிவந்தன செய்யவும், யான் நானும் மடனும் இழந்திலேன் எனத் தன் பெருமை கூறியது இது. இதற்கு விதி: தொல்: பொருள்: 11

1. மின்-மின்னல்; ஒளிர்-விளங்குகின்றது; 2. அவிர்விளங்குகின்ற, அறல்-ஈண்டு மின்னற் கொடிகள், போழும்- பிளந்து செல்லும்; பெயல்-மேகம், 2. அகை-வெட்டி வேறாக்கிய; தகைஅழகு வகிர்-தலைக்கோலம் என்னும் அணி, வகை-ஐந்துவகைக் கூந்தல்; நெறி-அடர்ந்த மயிர்; வயங்கிட்டு-விளங்கச்சூட்டி, கரு மேகத்திடையே தோன்றும் மின்னற் கொடிகள்போல், பொன்னை வெட்டிப் பல பிரிவுகளாகப் பண்ணிய தலைக்கோலம் என்னும் அணியைத் தலைமயிர்மீது சூட்டி என்பதே முதலிரண்டு அடிகளின் பொருளாம். 3. போழ்-தாழம்பூவின் துண்டுசெய்த இதழ்கள், 4. எயிறு-பல்; துவர்-பவளம், 9. ஐ-வியப்பு: ஐதேய்ந்தன்று-கண்டார் வியக்குமாறு தேய்ந்து விட்டது; 10. தீர்ந்தன்று-அற்றுளது; 11. வேய்-மூங்கில்; அமன்றன்று-தன்மையை மிகப் பெற்றுளது; 17. ஒற்றி-விழிப்பாய் இருந்து நோக்கி, 18. செவ்வி-காலம்; 19. புன்கண்-துன்பம்;21. காழ்-மதம்மிக்க யானையை அடக்கத் துணை புரியும் குத்துக்கோல், வரை-எல்லை, அதாவது அதன் ஆட்சிக்கு:23. ஏழைத்தன்மை- அறிவால் ஏழ்மையுற்ற தன்மை, அதாவது அறிவின்மை.