பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

அறம் தவறினான் அரசனே

தமிழ்நாட்டுச் சிற்றுார்த் தலைவன் ஒருவன், மகப் பேறின்றிப் பலநாள் வருந்திப் பேரறம் பல புரிந்ததன் பயனாய், அவனுக்கு மகளாய் வந்து பிறந்தாள் ஒர் இளம் பெண். பிறந்து பல்லாண்டு கழிந்த பின்னர், ஒருநாள், அவள், தன்னுரரின் நடுவேயிருந்த் பூஞ்சோலையுள் புகுந்து, அச்சோலையின் இடையே ஒடிய வாய்க்காலின் கரையில் வளமுற வளர்ந்திருந்த புலிநகக் கொன்றை மரத்தில், பெரியவாக மலர்ந்திருந்த பூங்கொத்துக்களைப் பறித்துக் கொணர்ந்தாள். அம் மலர்களைத் தன் மயிரின் இடை யிடையே வைத்து முடித்துக் கொண்டாள். அவ்வாறு ஒருசேரப் பின்னி முடித்த அவள் தலைமுடி, அம்மலரின் மகரந்தப் பொடிகளோடே, அவள் தோளிலே கிடந்து அழகு செய்தது. முழுமதி தன் கதிர்களை யெல்லாம் பரப்பிக் காய்ந்தாற்போல், பேரொளி வீசும் முகத்தினளாய அவள், இவ்வாறு தன் தலைக்கோலத்தை முடித்துக் கொண்ட பின்னர், பூத்தொழில் அமைந்த