பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 இ. புலவர் கா. கோவிந்தன்

மெல்லிய ஆடை உடுத்து, அவ்வாடை மீது, எண் கோவையாலாகிய மேகலை அணிந்து, தன் ஊர்ப்புறத்தே தென்றற் காற்றில் மெல்ல ஆடி அசையும் பூங்கொடி போல், உலாவிக் கொண்டிருந்தாள்.

அவளை அந்நிலையில் கண்டான் ஓர் இளைஞன். அத்துணை அழகு வாய்ந்த ஒரு பெண்ணை, அவன் அதற்கு முன்னர் யாண்டும் கண்டதில்லை. அதனால், "அவள் மக்கள் இனத்தில் பிறந்த ஒரு பெண்தான்ோ?” என ஐயுற்றான். "சிற்ப நூல் வல்லான் ஒருவன், அரிதின் முயன்று ஆக்கிய ஓவியப் பாவையோ? உலக மகளிர் அழகையெல்லாம் ஒன்று திரட்டி, ஒர் உருவாக்கித் தந்த அழகின் திருவுருவோ? ஆடவர்மீது கொண்ட ஆறாச் சினத்தால், கூற்றுவன் அவரை அழிக்க விரும்பி மேற்கொண்ட வடிவமோ?" என்றெல்லாம் எண்ணி இடர் உற்றது அவன் உள்ளம். "இத்தகைய பேரழகுடையாளை இதுகாறும் புறம்போக விடாமல், வீட்டினகத்தே வைத்துக் காத்ததுபோல் மேலும் காவாது, இப்போது புறம் போக விட்ட அவள் பெற்றோர் செயல் ஆற்றவும் கொடிதாம்!” ೯7೯p கருதினான். அவள் அழகைக் கண்டு, அத்துணை ஆர்வமும், ஆற்றாமையும், அவன் உள்ளத்தில் உருவெடுத் தாடின. அவள்பால் அவன் கொண்ட காதல், அவனை இவ்வாறெல்லாம் எண்ணி, ஏக்கமுறச் செய்ததோடு விடவில்லை. அவளை அணுகித், தன் அகத்தெழு ஆசையை அவளுக்கு அறிவிக்கவும் தூண்டிற்று. அதனால், அவளை அடுத்து, மேற்செல்லாவாறு தடுத்து நிறுத்தினான்.